பொது செய்தி

தமிழ்நாடு

பணிக்கு செல்லாமல் திரும்பிய தொழிலாளர்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
கம்பம்; ஒரு ஜீப்பில் 4 பேர் மட்டுமே பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் நேற்று காலை கேரளாஇடுக்கி ஏலத்தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.இடுக்கி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பம் பகுதியில் இருந்து தினமும்நுாற்றுக்கணக்கான ஜீப்புகளில் தொழிலாளர்கள் ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று

கம்பம்; ஒரு ஜீப்பில் 4 பேர் மட்டுமே பயணிக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் நேற்று காலை கேரளாஇடுக்கி ஏலத்தோட்டங்களுக்கு தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் புறக்கணித்தனர்.இடுக்கி மாவட்டத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் ஏலக்காய் சாகுபடி செய்யப்படுகிறது. கம்பம் பகுதியில் இருந்து தினமும்நுாற்றுக்கணக்கான ஜீப்புகளில் தொழிலாளர்கள் ஏலத்தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று திரும்புவர். ஒரு ஜீப்பில் 15 முதல் 20 பேர் ஏற்றி செல்வர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏப். 30 அதிகாலை கம்பத்தில் போலீசார் ஒரு ஜீப்பில் 4 பேர் மட்டுமே பயணிக்க வேண்டும் என கட்டுப்பாடு விதித்தனர். இதற்கிடையே மே 1, 2 விடுமுறைக்குப்பின் நேற்று காலை வழக்கம் போல ஜீப்புகளில் தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு ஏலத்தோட்டங்களுக்கு சென்றனர். தமிழக போலீசார் மறிக்கவில்லை. ஆனால் கம்பமெட்டு சோதனை சாவடியில் கேரள போலீசார் ஜீப்புகளை அனுமதிக்க மறுத்துவிட்டனர். 4 பேர் மட்டும் பயணித்தால் அனுமதிக்கிறோம். இல்லையென்றால் திரும்பி செல்லுங்கள் என்றனர். இதனால் பெரும்பாலான தொழிலாளர்கள் வேலைக்கு செல்லாமல் திரும்பினர். ஏலத்தோட்டங்களில் பணிகள் நடைபெறவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X