பொது செய்தி

தமிழ்நாடு

கும்பக்கரை அருவி தண்ணீர் வரத்து: நிரம்புகிறது குளங்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
பெரியகுளம்; பெரியகுளம் அருகே கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கோடைமழையால் அருவியில் இருந்து வீரப்பநாயக்கர், பட்டத்திகுளம், அழகுபாறை ஆற்றிற்கு நீர் வரத்து உள்ளது. இதனால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் பயன்பெறும்.கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதியில் இரு தினங்களாக பெய்த கோடைமழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. உள்ளூர், தேனி மாவட்டம் மட்டுமல்லாது மதுரை,

பெரியகுளம்; பெரியகுளம் அருகே கும்பக்கரை நீர்பிடிப்பு பகுதியில் பெய்த கோடைமழையால் அருவியில் இருந்து வீரப்பநாயக்கர், பட்டத்திகுளம், அழகுபாறை ஆற்றிற்கு நீர் வரத்து உள்ளது. இதனால் நுாற்றுக்கணக்கான ஏக்கர் விவசாயம் பயன்பெறும்.கும்பக்கரை நீர் பிடிப்பு பகுதியில் இரு தினங்களாக பெய்த கோடைமழையால் அருவிக்கு தண்ணீர் வரத்து உள்ளது. உள்ளூர், தேனி மாவட்டம் மட்டுமல்லாது மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் கும்பக்கரை அருவியில் குளிக்க வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் முதல் கொரோனா தடுப்புக்காக கும்பக்கரைக்கு செல்வதற்கு பயணிகளுக்கு வனத்துறை அனுமதி மறுத்துள்ளது.இந்த அருவியிலிருந்து வீரப்பநாயக்கர், பட்டத்திகுளம், அழகுபாறை ஆற்றிற்கு தண்ணீர் வரத்து அதிகம் உள்ளது. அதனால் நிரம்புகின்றன. இதனால் நுாற்றுக்கணக்கான நெல், கரும்பு, வாழைவிவசாயம் செழிக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X