தமிழ்நாடு

ஜி.சி.டி.,யில் விதிமுறை 'தாறுமாறு'; சில தினங்களில் தெரியும் கோளாறு!

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கோவை : கோவை ஜி.சி.டி.,யில் நேற்று முன் தினம் நடந்த, ஓட்டு எண்ணிக்கையின்போது, திரண்ட கட்சியினர் பலர் முறையாக மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் மறந்தே திரிந்தனர். இதனால், எப்படி தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு, கொரோனா தொற்று அதிகரித்ததோ அதே போன்று, மீண்டும் தொற்று பாதிப்பு உயர வாய்ப்பு இருப்பதாக, எச்சரிக்கை மணியடிக்கின்றனர் மருத்துவர்கள்.விழிப்புணர்வு
ஜி.சி.டி.,யில் விதிமுறை 'தாறுமாறு'; சில தினங்களில் தெரியும் கோளாறு!

கோவை : கோவை ஜி.சி.டி.,யில் நேற்று முன் தினம் நடந்த, ஓட்டு எண்ணிக்கையின்போது, திரண்ட கட்சியினர் பலர் முறையாக மாஸ்க் அணிவதையும், சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் மறந்தே திரிந்தனர். இதனால், எப்படி தேர்தல் பிரசாரத்துக்குப் பிறகு, கொரோனா தொற்று அதிகரித்ததோ அதே போன்று, மீண்டும் தொற்று பாதிப்பு உயர வாய்ப்பு இருப்பதாக, எச்சரிக்கை மணியடிக்கின்றனர் மருத்துவர்கள்.

விழிப்புணர்வு இருந்தும், அதை கடைபிடிக்காமல் சுற்றித்திரியும் பொதுமக்களால், கொரோனா முன்பிருந்ததை விட வேகமாக பரவி வருவதாக, சுகாதார துறை எச்சரிக்கிறது.முக்கவசம், சமூக இடைவெளி இப்படி, எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல், வலம் வருபவர்களால் தான் இன்று பிரச்னை.இதே நிலை நீடித்தால், மூன்றாம் அலைக்கும் வாய்ப்பிருக்கிறது என்கிறது நிபுணர்கள் குழு. நேற்று முன் தினம் ஜி.சி.டி., ஓட்டு எண்ணும் மையத்தில் திரண்ட 'மாஸ்க் அணியாத கூட்டம்', இதற்கு வித்திட்டுள்ளதாகவே கருத வேண்டியிருக்கிறது.


வெளியே போகாதீங்க!


ஒவ்வொரு ஓட்டு எண்ணிக்கை அரங்கிலும், சமூக இடைவெளியின்றி, நுாற்றுக்கணக்கானோர் திரண்டிருந்தனர். இவர்களில் பலர் முகக்கவசம் அணிவதையும், சமூக இடைவெளி பின்பற்றுவதையும் மறந்தே போயினர்.தேர்தல் பிரசாரத்தில் திரண்ட கூட்டத்தால், ஏற்பட்ட விபரீதத்தைதான் இப்போது அனுபவித்து வருகிறோம். எனவே, ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு சென்ற அனைவரும், வீடுகளில் தங்களை தாங்களே தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்; லேசான அறிகுறி இருந்தாலும் உடனடியாக, தங்களை பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்கின்றனர் டாக்டர்கள்.


ஒரே நாளில், 1,566 பேர்!


மாவட்டத்தில் தினமும், கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை எட்டி வருகிறது. நேற்றைய நிலவரப்படி, புதிய உச்சமாக, ஒரே நாளில் 1,566 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முக்கிய காரணம் பொது இடங்களில், எதைப்பற்றியும் கவலைப்படாமல் கூடுவோரே. 'நமக்கெல்லாம் கொரோனா வராது' என்ற இவர்களின் மனப்பாங்கு, நோய்க்கு சிவப்பு கம்பளம் விரிக்கிறது.


ஓராண்டு பாதிப்பு, சில மாதங்களில்!


கடந்தாண்டு மார்ச் முதல் ஓராண்டில், ஏற்பட்ட பாதிப்பு எண்ணிக்கை, கடந்த ஒரு சில மாதங்களில் எட்டும் நிலையில், கொரோனா படுவேகமாக பரவி வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு, அனைவரும் செயல்பட வேண்டும் என்று, எச்சரிக்கின்றனர் தொற்று நோயியல் நிபுணர்கள்.

கோவை அரசு மருத்துவமனை நுரையீரல் நோயியல் சிகிச்சை துறை தலைவர் கீர்த்திவாசன் கூறுகையில், ''கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இரண்டாவது அலையுடன் தொற்றுக்கு முடிவு கட்ட வேண்டுமென்பதற்காகவே, தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.பொதுமக்களுக்கு, தங்கள் குடும்பத்தில் யாருக்காவது பாதிப்பு ஏற்பட்ட பின்னரே, நோயின் தீவிரம் தெரிகிறது. ஆகவே அனைவரும் விதிகளை பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும்,'' என்றார்.


தடுப்பூசி ஒன்றே தடுக்கும்


இனிமேலும் விழிக்காவிடில், பாதிப்பு தினமும் அதிகரித்தபடி இருக்கும். முழு ஊரடங்கு அமல்படுத்துவதை தவிர, அரசுக்கு வேறு வழியிருக்காது. இதை உணர்ந்து, ஒவ்வொருவரும் தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும். அப்படியே வெளியே செல்ல நேரிட்டாலும், இரட்டை முகக்கவசம் அணிவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். முக்கியமாக, இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், இனியேனும் போட்டுக் கொள்ள வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
CBE CTZN - Chennai,இந்தியா
04-மே-202111:03:05 IST Report Abuse
CBE CTZN தடுப்பூசி போடுவது பிரச்சினை இல்லை.. இருந்தாலும் பிரச்சினை இருப்பதாகவே தெரிகிறது... பிரச்சினையை சொன்னால் தேச பாதுகாப்பு அல்லது அவதூறு வழக்கை சந்திக்க வேண்டி வரும். கடவுளே எல்லாரையும் காப்பாத்து...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X