பொது செய்தி

தமிழ்நாடு

சோத்துபாறை அணை நீர்மட்டம் உயர்ந்தது

Added : மே 04, 2021
Share
Advertisement
இந்த அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் தண்ணீர் வருகிறது. மொத்த உயரம் 126.28 அடி. பெரியகுளம் சுற்றுப்பகுதிகளில் மொத்தம் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 2020 அக். 26ல் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மார்ச் 15 வரை வழங்கப்பட்டது. சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால் நீர்மட்டம் ஏப்.

இந்த அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் தண்ணீர் வருகிறது. மொத்த உயரம் 126.28 அடி. பெரியகுளம் சுற்றுப்பகுதிகளில் மொத்தம் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 2020 அக். 26ல் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மார்ச் 15 வரை வழங்கப்பட்டது. சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்து வருவதால் நீர்மட்டம் ஏப். 20ல் 117.68 அடியாகவும், ஏப் 21 ல் 117.68, ஏப். 22ல் 117.26, ஏப். 23ல் 117.76, ஏப். 24ல் 116.76, ஏப். 25ல் 114.04 , ஏப் .26 முதல் மே 1 வரை 116.08 அடியாகஇருந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு பெய்த கனமழையால் அணை நீர்மட்டம் ஒரே நாளில் 8 அடி உயர்ந்து 124.31 அடியானது. அணைக்கு வினாடிக்கு 70 கன அடி நீர் வரத்து உள்ளது. பெரியகுளம் பகுதி குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 3 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.முதல் கட்ட எச்சரிக்கை அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் ஓரிரு நாட்களில் நிரம்பும் நிலை உள்ளது. அவ்வாறு நிரம்பினால் தண்ணீர் வராகநதியில் செல்லும். எனவே பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் குள்ளப்புரம் வழியாக கடந்து செல்லும் வராகநதி கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் முதல் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X