பொது செய்தி

தமிழ்நாடு

சட்டசபை தேர்தலில் அ.ம.மு.க. ஓட்டுகள் சரிவு

Added : மே 04, 2021
Share
Advertisement
தேனி; தேனி மாவட்டத்தில் அ.ம.மு.க.,ஓட்டுக்கள் சரிவால் அக் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இம்மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் ஓட்டுக்களை பிரிப்பதால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தி.மு.க. வெற்றிக்கு வழி வகுக்கும் என அரசியல் பிரமுகர்கள் கருதினர். ஆனால் 2019 இடைத்தேர்தலை விட 2021ல் அ.ம.மு.க. ஓட்டுகள் பெரும் சரிவை

தேனி; தேனி மாவட்டத்தில் அ.ம.மு.க.,ஓட்டுக்கள் சரிவால் அக் கட்சி நிர்வாகிகள் அதிர்ச்சியில் உள்ளனர். இம்மாவட்டத்தில் 4 தொகுதிகளில் அ.ம.மு.க. வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவர்கள் ஓட்டுக்களை பிரிப்பதால் அ.தி.மு.க.விற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதனால் தி.மு.க. வெற்றிக்கு வழி வகுக்கும் என அரசியல் பிரமுகர்கள் கருதினர். ஆனால் 2019 இடைத்தேர்தலை விட 2021ல் அ.ம.மு.க. ஓட்டுகள் பெரும் சரிவை கண்டுள்ளது. அ.ம.மு.க. ஓட்டுகளை தி.மு.க., அ.தி.மு.க.விற்கு கிடைத்துள்ளதாக தெரிகிறது.ஆண்டிபட்டியில் 2019 இடைத்தேர்தலில் அ.ம.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் 28,063 ஓட்டுக்களை பெற்றார். 2021 தேர்தலில் 11,896 ஓட்டுக்களை பெற்றார். பெரியகுளத்தில் 2019 இடைத்தேர்தலில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் கதிர்காமு 26,338 ஓட்டுக்களை பெற்றார். தற்போது 15,402 ஓட்டுக்களை பெற்றுள்ளார். தற்போது போடியில் போட்டியிட்ட அ.ம.மு.க. வேட்பாளர் முத்துச்சாமி 5649 ஓட்டுக்களும், கம்பத்தில் போட்டியிட்ட இக் கட்சி வேட்பாளர் சுரேஷ் 14,536 ஓட்டுக்களை பெற்றுள்ளனர். கடந்த தேர்தலில் பெற்ற ஓட்டுக்கள் மேலும் அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் இருந்த கட்சி தொண்டர்களுக்கு ஓட்டு சரிவு அதிர்ச்சியை அளித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X