அரசியல் செய்தி

தமிழ்நாடு

மன்சூர், மயில்சாமிக்கு போட்டி நோட்டா தான்!

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்குமான நெருக்கம், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழகத்துக்கு அதிகளவிலான முதல்வர்களைத் தந்தது தமிழக கலைத்துறைதான்.இந்தத் தேர்தலிலும் நடிகர் கமலும், இயக்குனரும் நடிகருமான சீமானும் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள். இருவருடைய கட்சிகளும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், சீமானின்
மன்சூர் அலிகான், மயில்சாமி, நோட்டா

தமிழக அரசியலுக்கும் சினிமாவுக்குமான நெருக்கம், வேறு எந்த மாநிலத்திலும் இல்லாதது. எம்.ஜி.ஆர்., கருணாநிதி, ஜெயலலிதா என்று தமிழகத்துக்கு அதிகளவிலான முதல்வர்களைத் தந்தது தமிழக கலைத்துறைதான்.

இந்தத் தேர்தலிலும் நடிகர் கமலும், இயக்குனரும் நடிகருமான சீமானும் மிகப்பெரிய பங்கு வகித்திருக்கிறார்கள். இருவருடைய கட்சிகளும் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், சீமானின் நாம் தமிழர் கட்சி, 234 தொகுதிகளிலும் வேட்பாளரை நிறுத்தி, பரவலாக ஓட்டுக்கள் வாங்கியதில் தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக அடையாளம் பெற்றிருக்கிறது.

ஆனால், சீமான் அவர் போட்டியிட்ட திருவொற்றியூர் தொகுதியில், 48 ஆயிரத்து 597 ஓட்டுக்கள் மட்டுமே வாங்க முடிந்தது. அங்கு அவருக்கு மூன்றாவது இடம்தான் கிடைத்தது. கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட கமல், முதலில் இருந்துமுதலிடத்தில் இருந்து, கடைசியில் 1,728 ஓட்டுக்கள் வித்தியாசத்தில், பா.ஜ., தேசிய மகளிரணி செயலாளர் வானதி சீனிவாசனிடம் தோற்றுப்போனார்.


latest tamil news


இவர்கள் நிலை இப்படியென்றால், 'நானும் நடிகன்தானே, எனக்கும் மக்கள் ஓட்டுப்போடுவார்கள்' என்று நம்பி, தேர்தல் களத்தில் குதித்த காமெடி நடிகர்கள் மயில்சாமி, மன்சூர் அலிகானின் நிலைதான் மிகப்பெரும் காமெடியாகிவிட்டது. விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்ட மயில்சாமிக்கு, 1,440 ஓட்டுக்கள் கிடைத்தன. அங்கு நோட்டாவுக்கு, 1,563 ஓட்டுக்கள் பதிவாகியுள்ளன.

'என்ர ஊரும் கோயம்புத்துாருதானுங்க' என்று கூறி, கோவைக்கு வந்து, தொண்டாமுத்துாரில் மனு தாக்கல் செய்தார், நடிகர் மன்சூர் அலிகான். 'அமைச்சர்ட்ட எவ்வளவு பணம் வாங்குனீங்க' என்று யாரோ கேட்டார்கள் என்று வேட்புமனுவை வாபஸ் பெறப்போய், அந்த முடிவையும் வாபஸ் பெற்று, போட்டியிட்ட அவருக்குக் கிடைத்த ஓட்டுக்கள் வெறும், 428 மட்டுமே. அந்தத் தொகுதியில் நோட்டாவுக்குக் கூட, 1,622 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன.

தமிழக மக்கள், காமெடி நடிகர்களை திரையில் மட்டுமின்றி, அரசியலிலும் காமெடியாகத்தான் பார்க்கிறார்கள் போலிருக்கிறது!

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மே-202115:57:00 IST Report Abuse
தமிழவேல் இன்று நோட்டாவிற்கு கீழ் தோற்றவர்கள் பற்றி பேசும் நாம், அன்று RK நகரில் நோட்டாவிற்கு கீழ் தோற்றவர்கள் பற்றி பேசவில்லை.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
04-மே-202114:05:31 IST Report Abuse
sankaseshan கல்வியில் சிறந்த தமிழ்நாடு இது பாரதியின் மொழி சினிமாவால் தாழ்ந்த தமிழ்நாடு இது இன்றய மொழி .
Rate this:
Cancel
சங்கீ சக்ரீ சனந்தகீ - சங்கீபுரம்,இந்தியா
04-மே-202112:40:57 IST Report Abuse
சங்கீ சக்ரீ சனந்தகீ \\நோட்டாவிற்கு கீழ் தோற்றவர்கள் பலர் கொண்டாடத்தக்கவர்கள்// அப்ப ஏன் போன தேர்தல்ல பாஜக வ நேட்டோ கட்சி என ஏசிக்கொண்டிருந்தீர்கள்,
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மே-202115:59:43 IST Report Abuse
தமிழவேல் உண்மைதானே.... வாயால் அதுவும் பெரிய பெரிய வடை சுடுபவர்களை வேறு என்ன செய்வார்கள் ?...
Rate this:
Raman - kottambatti,இந்தியா
04-மே-202116:20:52 IST Report Abuse
Ramanதனியா நின்னிருந்தா பாஜக போட்டி நோட்டா கூடத்தான் எதோ அதிமுக காலில் விழுந்து தேர்தலில் நின்னதால் தான் இந்த நிலை...
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மே-202118:17:45 IST Report Abuse
தமிழவேல் உண்மை ஆனால், பூ பூத்துட்டு, இலை முழுகிட்டுது. // தனியா நின்னிருந்தா பாஜக போட்டி நோட்டா கூடத்தான் எதோ அதிமுகவுடன் தேர்தலில் நின்னதால் தான் இந்த நிலை...//...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X