இந்திரா நகரில் இதென்ன இத்தனை குப்பை!

Added : மே 04, 2021
Share
Advertisement
இருளில் பழனியப்பா நகர்சவுரிபாளையம், பழனியப்பா நகர், 65வது வார்டில், கடந்த இரண்டு வாரங்களாக மின்கம்பத்தில் விளக்குகள் எரியவில்லை.- நாராயணசாமி, சவுரிபாளையம்.தொட்டி நிரம்பி நாளாச்சு!மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம், இந்திரா நகர் பகுதியில் குப்பைத்தொட்டி நிரம்பி, கழிவுகள் சாலையில் சிதறிக்கிடக்கிறது.- பாலு, இந்திராநகர்.சாலையில் தேங்கும் மழைநீர்மேட்டுப்பாளையம்

இருளில் பழனியப்பா நகர்சவுரிபாளையம், பழனியப்பா நகர், 65வது வார்டில், கடந்த இரண்டு வாரங்களாக மின்கம்பத்தில் விளக்குகள் எரியவில்லை.- நாராயணசாமி, சவுரிபாளையம்.

தொட்டி நிரம்பி நாளாச்சு!மதுக்கரை மார்க்கெட் ரோடு, சுந்தராபுரம், இந்திரா நகர் பகுதியில் குப்பைத்தொட்டி நிரம்பி, கழிவுகள் சாலையில் சிதறிக்கிடக்கிறது.- பாலு, இந்திராநகர்.

சாலையில் தேங்கும் மழைநீர்மேட்டுப்பாளையம் ரோடு, மத்தம்பாளையம் முதல் சிறுமுகை சாலையிலுள்ள ரயில்வே பாலத்தின் கீழ் மழைநீர் தேங்காமல் இருக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமமூர்த்தி, சிறுமுகை.

முத்துநகரில் மூச்சு முட்டுதுஈச்சனாரி, முத்துநகர், 100வது வார்டு பகுதியில், குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை தொடர்ந்து எரிப்பதால், பொதுமக்களுக்கு சுவாசப்பிரச்னை ஏற்படுகிறது.- பாபு, முத்துநகர்.

சேதமடைந்த சாலைசரவணம்பட்டி, அம்மன் கோவில் அருகே, ராகம் பேக்கரி எதிரே சேதமடைந்த சாலை கடந்த 6 மாதங்களுக்கு மேலாக சீரமைக்கப்படாமல் உள்ளது.- சுரேஷ், சரவணம்பட்டி.

குப்பை மலைஜி.என். மில்ஸ், எஸ்.எம். பாளையம் ரோடு, எஸ்.எஸ். கார்டன் பகுதியில் சாலையின் இருபுறங்களிலும் குப்பை கழிவுகள் குவிந்து கிடக்கிறது.- ஈஸ்வரி, கவுண்டம்பாளையம்.

கடும் துர்நாற்றம்ஒப்பணக்கார வீதி, 82வது வார்டு, டிரான்ஸ்பார்மர் எதிரே தேங்கி நிற்கும் கழிவுநீரால், அப்பகுதி முழுவதும் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.- ராமமூர்த்தி, ஒப்பணக்கார வீதி.

காத்திருக்கும் கழிவுகள்அவினாசி ரோடு, 71வது வார்டு, அண்ணாசிலை அருகே சாலையோரத்தில் தேங்கியுள்ள கழிவுகள் பல மாதங்களாக அகற்றப்படாமல் உள்ளது.- சந்திரசேகர், காந்திபுரம்.

மூடப்படாத குழிகள்கோவை மாநகராட்சி, 66வது வார், ராஜேஸ்வரி நகரில், குடிநீர் குழாய் இணைப்புக்காக தோண்டப்பட்ட குழிகள் பலமாதங்களாகியும் சரியாக மூடப்படவில்லை.- தேவராஜ், ராஜேஸ்வரி நகர்.

மின்விளக்குகள் பழுதுகுனியமுத்துார், சாஸ்தா நகர், கே.ஜி.கே. ரோட்டில் மின்விளக்குகள் எரியாததால் இரவு நேரங்களில் நடமாடவே மக்கள் அஞ்சுகின்றனர்.- வெங்கடேஷ்குமார், குனியமுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X