பொது செய்தி

தமிழ்நாடு

'குளுகுளு' ஆபீசர்களுக்கு வியர்க்குது...

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
கொரோனா கட்டுப்பாட்டை மீறி, தெருவில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு கொண்டிருக்க, சித்ராவை போனில் தொடர்பு கொண்டாள் மித்ரா.''என்னக்கா... பிஸியா,'' என்றதும், ''ஆமான்டி மித்து. என் சித்தப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவரை பார்க்க போகணும். பார்த்துட்டு, அப்படியே வீட்டுக்கு வரேன்,''''வாங்க, 'லஞ்ச்' ரெடி பண்ணிடறேன்,'' சொன்ன மித்ரா, சமையலறைக்குள் புகுந்தாள்.சொன்னது

கொரோனா கட்டுப்பாட்டை மீறி, தெருவில் பட்டாசு வெடிக்கும் சத்தம் கேட்டு கொண்டிருக்க, சித்ராவை போனில் தொடர்பு கொண்டாள் மித்ரா.''என்னக்கா... பிஸியா,'' என்றதும், ''ஆமான்டி மித்து. என் சித்தப்பாவுக்கு உடம்பு சரியில்லை. அவரை பார்க்க போகணும். பார்த்துட்டு, அப்படியே வீட்டுக்கு வரேன்,''''வாங்க, 'லஞ்ச்' ரெடி பண்ணிடறேன்,'' சொன்ன மித்ரா, சமையலறைக்குள் புகுந்தாள்.சொன்னது போலவே, மித்ரா வீட்டுக்கு வந்த சித்ரா. ''என்ன மித்து எலக்ஷன் ரிசல்ட் என்ன சொல்லுது?'' என்றாள்.''கணிப்புகள் சொன்னபடியே, சூரிய கட்சி ஜெயிச்சுடுச்சுக்கா,''''ஏன், மித்து, ஓட்டு எண்ணிக்கை நடத்துறதுக்கு, எதுக்கு கம்ப்யூட்டர்னு கேட்டு, ஏஜன்டுகள் அடாவடி பண்ணிட்டாங்களாம்,'' கேள்வி கேட்டாள்.''என்ன மேட்டர்க்கா?''''எல்.ஆர்.ஜி., காலேஜில் ஓட்டு எண்ணிக்கை பணிக்காக, மையத்தை தயார் பண்ணும் வேலை நடந்தப்ப, கம்ப்யூட்டர் வைச்சு, 'நெட்' கனெக்ஷன் கொடுத்துட்டு இருந்தாங்க. இதுக்காக கம்ப்யூட்டர எடுத்துட்டுபோனப்ப, ஓட்டு எண்ணும் மையத்துல இருந்த ஏஜன்டுங்க சிலரு, 'ஓட்டு மெஷினில் தானே ஓட்டு எண்ணப்போறீங்க; கம்ப்யூட்டர் எதுக்குன்னு கேட்டு நச்சரிச்சுட்டாங்களாம்,''''பொறுமையா கேட்ட அதிகாரிங்க, ஓட்டு விவரத்தை உடனுக்குடன் பதிவு செஞ்சு, இணைய தளத்துக்கு அணுப்பனும்; அதுக்குத்தான்னு சொன்னதும், 'சரீங்... சார்'ன்னு சொல்லி, வழி விட்டாங்களாம்'' என்றாள் சித்ரா.''என்ன பண்றது சிலர் இப்படித்தான் இருக்காங்க. அத விடுங்க்கா. லிங்கேஸ்வரர் ஊர்ல, எலக் ஷன் ரிசல்ட் வர்றதுக்குள்ள 'பார்'ல காசு பார்க்க சூரிய கட்சிக்காரங்க காய் நகர்த்த ஆரம்பிச்சுட்டாங்களாம்,'' என்ற மித்ரா, தொடர்ந்தாள்.''எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், டாஸ்மாக் பார் டெண்டரை, அந்தந்த பகுதில இருக்கிற, அந்தந்த கட்சிக்காரங்களுக்கு கொடுப்பாங்க. அதனால, சூரிய கட்சி நிர்வாகிங்க பல பேரு, நல்லா வியாபாரம் நடக்கிற டாஸ்மாக் 'பார்'களை 'லிஸ்ட்' எடுத்து வைச்சிருக்காங்களாம். 'எலக்ஷன் ரிசல்ட்' வந்ததும், அந்த 'பார்'களை 'டேக் ஓவர்' பண்ண ரெடியாகிட்டாங்களாம்,''''மித்து, அங்க மட்டுமில்ல. டிஸ்டிரிக்ட் முழுக்க, இதேநிலை தான்டி,'' என்ற சித்ரா, ''கோழிப்பண்ணை ஊரில் பர்மிஷன் இல்லாம நிறைய இடத்துல பார் நடக்குது. எந்த ஆபீஸரும் கண்டுக்கல. 'மாமூலா' நடக்கறதால, அப்பப்ப ரெய்டு நடத்தி, 'ஐ வாஷ்' பண்றாங்க,'' என சலித்து கொண்டாள் மித்ரா.''மொட்டை பெட்டிஷன்' விவகாரத்துல, சவுத் தாலுகாவுல இருக்கற உதவியாளர, வேற பக்கம் 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம்,'' அடுத்த மேட்டருக்கு தாவினாள் சித்ரா.''என்னக்கா, ஆச்சு?''''மித்து. திருப்பூர் சவுத் தாலுகாவுல, கிராம உதவியாளர்களுக்கான 'அரியர்' தொகையை கொடுக்காம, இழுத்தடிக்கறதா ஏற்கனவே நாம் பேசினோமில்ல. அந்த அமவுன்ட்டை ரிலீஸ் செய்யணும்னா, கொஞ்சம் அதிகமாவே 'கமிஷன்' வேணும்னு சம்மந்தப்பட்ட அலுவலருங்க எதிர்பார்க்கிறாங்க,''''பல இடங்கள்ல இருந்து, போலீசுக்கு புகார் போனதால, நல்லுார் போலீஸ்காரங்க சம்மந்தப்பட்ட அலுவலரை கூப்பிட்டு விசாரிச்சிருக்காங்க. நிலைமை முத்திப்போனதால, சம்பந்தப்பட்ட 'கந்த'மான நபரை, 'சாமி' நீங்க, வட மாநிலத்துல இருந்து, 'டிரெய்னிங்' வர்ற பயிற்சி கலெக்டருக்கு, நேர்முக எழுத்தரா போயிடுங்கன்னு' சொல்லி 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்களாம்,'' என்ற சித்ரா ''இப்பவே கண்ண கட்டுதேன்னு, போலீஸ்காரங்க புலம்பறாங்களாம்,'' என அடுத்த தகவலை கூறினாள்.''என்னக்கா, ஏதோ சூரியக்கட்சி மேட்டர் சொல்ல வர்றீங்க போல'' சொல்லி சிரித்தாள் மித்ரா.''வெரிகுட், கரெக்ட்டா கண்டு பிடிச்சிட்டியே. எல்.ஆர்.ஜி., காலேஜில், கவுன்டிங் முடிவில் வெற்றி உறுதியான பின், 'சவுத்'தில் ஜெயிச்ச, சூரிய கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள், கவுன்டிங் சென்டர் முன்னாடி, பட்டாசு வெடித்தனர்,''''இதைப்பார்த்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் ஓடிச்சென்று, பட்டாசு வெடித்தவரை, ஜீப்பில் ஸ்டேஷனுக்கு கூட்டிட்டு போனாங்களாம். இந்த கூத்தை பார்த்த பொதுமக்கள், ரிசல்ட் நாளிலேயே இப்படியா... ம்ம்... இனி வர்ற நாட்களில் எப்படியோ?,'னு பேசிட்டாங்களாம்,''''அதிலும், பார்த்தீன்னா இந்த குட்டித்தலைவர்கள் ஆட்டம் கொஞ்சம் ஜாஸ்தி தான். ஒன்னும் பண்ண முடியாது,'' என்ற மித்ரா, ''அக்கா, கார்ப்ரேஷன் முன்னாடி நின்னுட்டிருந்த 'போலீஸ் ஜீப்'பை போதை ஆசாமி ஒருத்தர் கடத்திட்டு போன விவகாரத்தில், ஸ்டேஷன் அதிகாரிக்கு 'செமடோஸ்' விழுந்துதாம்,'' என போலீஸ் மேட்டர் பேசினாள்.''அப்படியா?''''உண்மைதாங்க்கா. 'சிட்டி' போலீசில், 'சவுத் டிராபிக்' போலீஸ் ஸ்டேஷன் முன், போலீஸ் 'ஜீப்' நின்றது. இதை, அந்த வழியாக சென்ற போதை ஆசாமி ஓட்டிட்டு போயிட்டாரு. இந்த விஷயம் போலீசாருக்கு ரொம்ப நேரமா தெரியலையாம்,''''இது கூட தெரியாம, என்ன செஞ்சிட்டிருந்தீங்கன்னு, ஸ்டேஷன் அதிகாரிக்கு, 'குளுகுளு' அதிகாரிகிட்ட 'செம டோஸ்' விழுந்து இருக்கு. இந்த மேட்டரில், அஜாக்கிரதையா இருந்ததாக, டிரைவரையும் 'சஸ்பெண்ட்' பண்ணிட்டாங்க,''''அதான், ரொம்ப கரெக்டா, கவனமா இல்லாட்டி இப்படித்தான் இருக்கும்,'' சொன்ன சித்ரா, ''சிட்டி, அப்புறம், ரூரலில், இலைக்கட்சி பிரமுகர்களின் ஆசியோடு வலம் வந்த போலீஸ் அதிகாரிகள் சிலர், ஆட்சி மாற்றத்தால், பதட்டமா இருக்காங்களாம்,'' என்றாள்.''ஏன்னு கேட்டா, எப்படியும் டிரான்ஸ்பர் பண்ணுவாங்கன்னு உறுதியா சொல்றாங்களாம். அதனால, இப்ப இருக்கற இடத்தை தக்க வச்சுக்க, அவுங்க கிட்டயும் 'சரண்டர்' ஆகலாமா அல்லது துாக்கி போடற இடத்துக்கு போலாமா'ன்னு 'டிஸ்கஷன்' தீவிரமா போயிட்டு இருக்குதாம்,''''ராமன் ஆண்டா என்ன, ராவணன் ஆண்டா என்னன்னு, நம்ம வேலயை நேர்மையா பாத்தா, யார்கிட்ட பயப்பட வேண்டியதில்லையே...''மித்ரா சொன்னதும், ''ரொம்ப கரெக்டா சொன்னடி,'' பாராட்டிய சித்ரா, ''தாரா தொகுதியில, தாமரை கட்சி குறைஞ்ச ஓட்டில் வெற்றியை பறி கொடுத்ததுக்கு காரணமே, கூட்டணி கட்சி நிர்வாகிகள்தான்,' 'ஓப்பன் டாக்' உலா வருது,'' என்றாள்.''எப்படிக்கா சொல்றாங்க...''''மித்து, எலக் ஷனுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே, எங்கெல்லாம் 'பட்டுவாடா' பண்ணோணும்னு, லிஸ்ட் போட்டு, மொத்த அமவுன்டை, இலை நிர்வாகிகள் கிட்ட கொடுத்திட்டாங்க. ஆனா, கொஞ்ச இடத்தில கொடுத்திட்டு, பல கிராமங்களுக்கு கொடுக்கலையாம்,''''கிடைச்சவங்க, 'உங்களுக்கு வந்துடுச்சான்னு' கேட்க, கிடைக்காதவங்க கடுப்பாய்ட்டாங்களாம். இந்த ஒரு காரணத்திலதான், 'வட போச்சு'ங்கற கதையா, வெற்றி கிடைக்கலேன்னு,' சொல்றாங்களாம்,''''அதுசரி, ஏதாவது ஒரு காரணம் இவங்களுக்கு கிடைச்சுடுது,'' மித்ரா சொன்னதும், ''ஓ.கே., மித்து, நான் கிளம்பறேன்,'' என்றவாறு, வண்டியை ஸ்டார்ட் செய்தாள்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
05-மே-202118:23:50 IST Report Abuse
Jayvee கடந்த மூன்றாண்டுகளில் லஞ்சம் பெரிதாக இல்லாமல் இருந்தது.. இனி அதிகாரிகளுக்கு கொண்டாட்டம்தான்.. தபால் ஓடுகளும் தமிழக அரசு ஊழியர்களும் குறிப்பாக தலைமை செயலக ஊழியர்களும் அதிகளவில் திமுகவின் அத்தரவாளர்களாக இருப்பதன் காரனம் தாராளமாக தையிரமாக லஞ்சம் வாங்கலாம்.. வோட்டு போட்ட ஆடுகள் இனி கதறும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X