பொது செய்தி

தமிழ்நாடு

மே மாத சம்பளம்; பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
கோவை : பள்ளி விடுமுறையை காரணம் காட்டி, மே மாதத்திற்கான ஊதியம் பிடித்தம் செய்ய கூடாதென, பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைப்பாடங்களுக்கு, வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் வீதம் வகுப்பு கையாள்வர். இவர்களுக்கு, மத்திய,

கோவை : பள்ளி விடுமுறையை காரணம் காட்டி, மே மாதத்திற்கான ஊதியம் பிடித்தம் செய்ய கூடாதென, பகுதிநேர ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் கீழ், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தையல், இசை, ஓவியம் உள்ளிட்ட கலைப்பாடங்களுக்கு, வாரத்திற்கு மூன்று அரைநாட்கள் வீதம் வகுப்பு கையாள்வர். இவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகளின் கூட்டு நிதியில், மாதம் 10 ஆயிரம் ரூபாய், ஊதியமாக வழங்கப்படுகிறது.

கொரோனா தொற்று காரணமாக, கடந்த ஆக.,ல் தான் பள்ளிகள் திறக்கப்பட்டன. மாணவர்கள் பள்ளிக்கு வராததால், அலுவலக பணிகளில் ஈடுபடுத்திக்கொண்டு, ஊதியம் வழஙக உத்தரவிடப்பட்டது.தற்போது தொற்று வேகமாக பரவுவதால், மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பகுதிநேர ஆசிரியர்கள் ஊதியத்துடன் விடுமுறை வழங்க வேண்டுமென, கோரிக்கை விடுத்துள்ளனர்.

பகுதிநேர ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'வழக்கமாக மே மாதம் கோடை விடுமுறை என்பதால், பகுதிநேர ஆசிரியர்களுக்கு, ஊதியம் வழங்கப்படுவதில்லை. சிறப்பு வகுப்புகள் நடத்தி, குடும்ப செலவை சமாளித்து கொள்வோம்.தற்போது தொற்று வேகமாக பரவி வரும் சூழலில், அதுபோன்ற முயற்சிகளும் பலனிக்காததால், ஊதியம் வழங்காவிடில் பெரிய சிரமமாகி விடும். 'எனவே, மீண்டும் பள்ளிகள் திறக்கும் வரை, பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X