தமிழ்நாடு

கடந்த தேர்தலில் 15 ஆயிரம் இந்த முறை லட்சம் ஓட்டு; நாம் தமிழர் கட்சி அபாரம்

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : கடந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதியிலும் சேர்ந்து, 15 ஆயிரம் ஓட்டு மட்டுமே வாங்கிய நாம்தமிழர் கட்சி, இந்த முறை ஒரு லட்சத்து, 2,256 ஓட்டுக்களை அள்ளியது.திருப்பூர் வடக்கு தொகுதியில் இந்த முறை, 23 ஆயிரத்து, 110 ஓட்டுக்களை இக்கட்சி பெற்றுள்ளது. கடந்த முறை, 2,928 ஓட்டு மட்டுமே பெற்றது. கடந்த முறை, 1.33 ஆக இருந்த ஓட்டு சதவீதம், 9.71 ஆக உயர்ந்தது.பல்லடத்தில், கடந்த

திருப்பூர் : கடந்த தேர்தலில் திருப்பூர் மாவட்டத்தின் எட்டு தொகுதியிலும் சேர்ந்து, 15 ஆயிரம் ஓட்டு மட்டுமே வாங்கிய நாம்தமிழர் கட்சி, இந்த முறை ஒரு லட்சத்து, 2,256 ஓட்டுக்களை அள்ளியது.

திருப்பூர் வடக்கு தொகுதியில் இந்த முறை, 23 ஆயிரத்து, 110 ஓட்டுக்களை இக்கட்சி பெற்றுள்ளது. கடந்த முறை, 2,928 ஓட்டு மட்டுமே பெற்றது. கடந்த முறை, 1.33 ஆக இருந்த ஓட்டு சதவீதம், 9.71 ஆக உயர்ந்தது.பல்லடத்தில், கடந்த முறை 2,911 ஓட்டு வாங்கிய இக்கட்சி, இம்முறை, 20 ஆயிரத்து, 524 ஆக அதிகரித்துள்ளது. அவிநாசியில் கடந்த தேர்தலில் இக்கட்சி வேட்பாளர், 1,514 ஓட்டு மட்டும் வாங்கினார். தற்போது, 13 ஆயிரத்து, 526 ஓட்டு வாங்கியுள்ளார்.

காங்கயத்தில் கடந்த முறை, 2,871; இம்முறை, 11 ஆயிரத்து, 307 ஓட்டுகள்; தாராபுரத்தில் கடந்த தேர்தலில், 1,350; இம்முறை, 6,753 ஓட்டுக்கள்.மடத்துக்குளத்தில் கடந்த கடந்த முறை, 980 ஓட்டு; நடப்பு தேர்தலில், 6,245 ஓட்டு.கடந்த தேர்தலில் உடுமலை தொகுதியில் இக்கட்சி போட்டியிடவில்லை; இம்முறை, 8,163 ஓட்டுக்களை வாங்கியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X