தேர்தல் வெற்றி கொண்டாட்டம்; தடை மீறியவர்கள் மீது வழக்கு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் வெற்றி கொண்டாட்டம்; தடை மீறியவர்கள் மீது வழக்கு

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
கோவை : கோவையில் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி, தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் வழக்குபதிவு செய்தனர்.தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நேற்று முன்தினம் நடந்தது. அதே நேரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.மேலும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என்றும்,

கோவை : கோவையில் ஊரடங்கு உத்தரவு தடையை மீறி, தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட்டவர்கள் மீது, போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை, நேற்று முன்தினம் நடந்தது. அதே நேரம் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில், நேற்று முன்தினம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.மேலும் தேர்தல் வெற்றி கொண்டாட்டங்களில் ஈடுபட கூடாது என்றும், தடையை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், எச்சரிக்கை செய்யப்பட்டிருந்தது.

இச்சூழலில், நேற்று முன்தினம் தேர்தல் வெற்றியை, சிலர் தடையை மீறி ரோட்டில் கொண்டாடினர். வின்சென்ட் ரோடு, டவுன்ஹால் மணி கூண்டு, மேட்டூர், மாகாளியம்மன் கோவில் உள்ளிட்ட இடங்களில் ஒன்று சேர்ந்து, சிலர் கூட்டமாக தேர்தல் வெற்றியை கொண்டாடினர்.இது தொடர்பாக உக்கடம் மற்றும் போத்தனுார் போலீசார், 30க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X