பொது செய்தி

தமிழ்நாடு

ஓட்டு இயந்திரங்கள் பல்லடம் சென்றன!

Added : மே 04, 2021
Share
Advertisement
பல்லடம் : தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததால், ஓட்டு இயந்திரங்கள், பல்லடம் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டன.திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 8 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்கள் திருப்பூர் மற்றும் பல்லடம் தாலுகா அலுவலகங்களில் உள்ள 'ஸ்டிராங்' ரூம்களில்

பல்லடம் : தேர்தல் ஓட்டு எண்ணிக்கை முடிந்ததால், ஓட்டு இயந்திரங்கள், பல்லடம் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டன.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள, 8 சட்டசபை தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, திருப்பூர் எல்.ஆர்.ஜி., கல்லுாரியில் நேற்று முன்தினம் நடந்தது. தேர்தலில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு இயந்திரங்கள் திருப்பூர் மற்றும் பல்லடம் தாலுகா அலுவலகங்களில் உள்ள 'ஸ்டிராங்' ரூம்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தன. ஓட்டு எண்ணிக்கை நிறைவடைந்ததை தொடர்ந்து, இயந்திரங்கள் மீண்டும் பல்லடம் தாலுகா அலுவலகம் கொண்டு செல்லப்பட்டன.

தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட, 549 பேலட் மற்றும் 1,098 கன்ட்ரோல் யூனிட்டுகள் மற்றும் தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட, 349 பேலட் மற்றும் 349 கன்ட்ரோல் யூனிட்டுகள் என, மொத்தம், 898 பேலட் யூனிட்டுகள், மற்றும் 1,447 கன்ட்ரோல் யூனிட்டுகள் ஆகியவை பல்லடம் வந்துள்ளன.எண்ணிக்கை சரிபார்க்கப்பட்ட பின் அரசியல் கட்சியினர் முன்னிலையில் 'ஸ்ட்ராங் ரூம்' சீல் வைக்கப்படும். இதர தொகுதிகளுக்கு உட்பட்ட ஓட்டு இயந்திரங்கள், திருப்பூர், காங்கயம், மடத்துக்குளம் உட்பட தாலுகா அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X