பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் பாதுகாப்பில் ஓட்டுப்பதிவு இயந்திரம்

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளிலும், சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, ஓட்டு எண்ணிக்கை முடிந்து, வெற்றி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், 'படிவம் 17 சி' மற்றும் ஓட்டுப்பெட்டிகள், அந்தந்த பெட்டிகளில் வைத்து, மீண்டும் 'சீல்' வைக்கப்பட்டன. அவிநாசி மற்றும் திருப்பூர்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, எட்டு தொகுதிகளிலும், சட்டசபை தேர்தல் நடந்து முடிந்துள்ளது.பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட, ஓட்டு எண்ணிக்கை முடிந்து, வெற்றி வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், 'படிவம் 17 சி' மற்றும் ஓட்டுப்பெட்டிகள், அந்தந்த பெட்டிகளில் வைத்து, மீண்டும் 'சீல்' வைக்கப்பட்டன. அவிநாசி மற்றும் திருப்பூர் வடக்கு தொகுதியின் இயந்திரங்கள், திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.பல்லடம் மற்றும் தாராபுரம் தொகுதிகளின் இயந்திரங்கள், பல்லடம் தாலுகா அலுவலகம்; காங்கயம் தாலுகா அலுவலகம்; திருப்பூர் தெற்கு தொகுதியில், வேலம்பாளையம் மண்டல அலுவலகம், உடுமலையில், ஆர்.டி.ஓ., அலுவலகம்; மடத்துக்குளம் தாலுகா அலுவலகங்களில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன.

மீண்டும், தற்காலிக 'ஸ்ட்ராங் ரூம்'களில் வைத்து, போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்தாலும், மேலும் 45 நாட்கள் விவரங்களை அழிக்காமல், தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டில் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. அடுத்த, 45 நாட்களுக்கு பிறகு, மாவட்ட 'ஸ்ட்ராங் ரூம்'முக்கு மாற்றப்படும் என, தேர்தல் அலுவலர்கள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X