பொது செய்தி

தமிழ்நாடு

'ஆபத்பாந்தவன்' ஆக தடுப்பூசி... கொரோனா பயம் எதற்கு!

Added : மே 04, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
திருப்பூர் : தொழிலாளர்கள் அனைவரும், எவ்வித பயமுமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம், என தொழில்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.திருப்பூர் ஏற்று மதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார்:நான், கொரோ னா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன். ஒருநாள் மட்டும் சோர்வு ஏற்பட்டது; மறுநாள் சரியாகிவிட்டது. கோவேக்ஸின், கோவிஷீல்டு இரண்டுமே சிறந்த தடுப்பூசிகள்தான்.

திருப்பூர் : தொழிலாளர்கள் அனைவரும், எவ்வித பயமுமின்றி தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம், என தொழில்துறையினர் தொடர்ந்து அறிவுறுத்துகின்றனர்.

திருப்பூர் ஏற்று மதியாளர் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார்:நான், கொரோ னா தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளேன். ஒருநாள் மட்டும் சோர்வு ஏற்பட்டது; மறுநாள் சரியாகிவிட்டது. கோவேக்ஸின், கோவிஷீல்டு இரண்டுமே சிறந்த தடுப்பூசிகள்தான். சுகாதாரத்துறையுடன் இணைந்து, எங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் தொழிலாளருக்கு, தடுப்பூசி செலுத்திவருகிறோம். திருப்பூர் பின்னலாடை தொழில்முனைவோர், தொழிலாளர் அனைவரும் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும்.

நிட்மா சங்க தலைவர் ரத்தினசாமி:கொரோனா தடுப்பூசி, உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியையும்; மனதுக்கு தன்னம்பிக்கையையும் அதிகரிக்கச் செய்கிறது. எனவே, அனைவரும் தவறாமல், ஊசி போட்டுக்கொள்ளவேண்டும். தடுப் பூசி தட்டுப்பாடு நிலவுகிறது. முதலில், 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணியை நிறைவு செய்யவேண்டும். அதன்பின், 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணியை துவக்கவேண்டும். இதன்மூலம், வீண் பிரச்னைகள் தவிர்க்கப்படும்.

திருப்பூர் தொழில் பாதுகாப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் அண்ணாதுரை:அரசு மருத்துவமனையில், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளேன். 85 வயதான எனது பெற்றோரும், தடுப்பூசி போட்டுள்ளனர். தடுப்பூசி குறித்து எவ்வித பயமோ; தயக்கமோ தேவையில்லை; சமூக தளங்களில் பரவும் வீண் வதந்திகளை புறந்தள்ளவேண்டும். கொரோனாவுக்கு எதிராக போராட நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம், தடுப்பூசி மட்டும்தான். அனைவரும் தடுப்பூசி போட்டு, பாதுகாப்பை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

லகு உத்யோக் பாரதி தேசிய செயலாளர் மோகனசுந்தரம்:பலகட்ட பரிசேதனைகளுக்குப் பின்னரே, கொரோனா தடுப்பூசியை அரசு, பயன்பாட்டுக்கு கொண்டுவந்துள்ளது.கண்ணுக்கு தெரியாத கொரோனா என்கிற எதிரிக்கு எதிராக போராட, நம்மிடம் உள்ள அருமருந்தாக, கோவேக்ஸின், கோவி ஷீல்டு உள்ளன. திருப்பூர் ஆடை உற்பத்தி நிறுவன தொழிலாளர் மத்தியில், தடுப்பூசி போடுவதன் அவசியம் குறித்து, தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ganesan - Masurai,இந்தியா
04-மே-202107:43:57 IST Report Abuse
Ganesan தடுப்பூசி கொரோனைவை தடுக்கும் என்பது சற்று ஆறுதல் அளிக்கும் செய்தி. இத்தடுப்பூசியை எதிர்த்தவர்கள் எல்லாம் முதல் ஆளாகப் போய் இவ்வூசியை போட்டுக் கொண்டனர். இதைப்போட்டுக் கொண்டாலும் மக்களும் அரசும் பொறுப்புணர்ச்சியோடு நடந்து கொள்வது அவசியம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X