தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்களுக்காக கட்டுப்பாட்டு அறை!

Added : மே 04, 2021
Share
Advertisement
திருப்பூர் : வெளிமாநில தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தெரிவிப்பதற்காக, தொழிலாளர் துறை சார்பில் திருப்பூரில் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பீகார் போன்ற வெளிமாநில தொழிலாளர் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.கடந்தாண்டு ஊரடங்கின்போது, வெளிமாநில
வெளிமாநில தொழிலாளர்களுக்காக கட்டுப்பாட்டு அறை!

திருப்பூர் : வெளிமாநில தொழிலாளர்கள், கொரோனா ஊரடங்கு காலத்தில் ஏற்படும் பிரச்னைகளை தெரிவிப்பதற்காக, தொழிலாளர் துறை சார்பில் திருப்பூரில் கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்களில், ஒடிசா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பீகார் போன்ற வெளிமாநில தொழிலாளர் ஆயிரக்கணக்கானோர் பணிபுரிகின்றனர்.கடந்தாண்டு ஊரடங்கின்போது, வெளிமாநில தொழிலாளர்கள், வேலை இழப்பு; பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், சொந்த ஊர் செல்ல முடியாமை; உணவு பொருட்கள் தட்டுப்பாடு பிரச்னைகளை எதிர்கொண்டனர்.

கொரோனா பரவல் அதிகரிப்பால் தற்போது இரவு ஊரடங்கு; ஞாயிறு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. வெளிமாநில தொழிலாளர், சொந்த ஊர் நோக்கி செல்லத்துவங்கியுள்ளனர். இதனால், ஆயத்த ஆடை நிறுவனங்களில், தொழிலாளர் பற்றாக்குறை அதிகரித்துவருகிறது. வெளிமாநில தொழிலாளர் திருப்பூரிலேயே தொடர்ந்து பணிபுரியும் வகையிலும், தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காகவும், தொழிலாளர் துறை, கட்டுப்பாட்டு அறையை துவக்கியுள்ளது.

மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் மலர்கொடி வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டத்தில், வெளிமாநில தொழிலாளர் அதிகளவில் பணிபுரிகின்றனர். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பதற்காக, கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்ட தொழிலாளர் துறை உதவி கமிஷனர் பூங்கொடி தலைமையில், தொழிலாளர் துறை துணை ஆய்வாளர்கள் (பொ) செந்தில்குமார், பேச்சிமுத்து ஆகியோரை உறுப்பினராக கொண்டு, கட்டுப்பாட்டு அறை இயங்குகிறது.

கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளை, 98897 23235, 98942 57543, 99442 58037 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம். திருப்பூர் மாவட்டத்தில் பணிபுரியும், வெளிமாநில தொழிலாளர்கள், கட்டுப்பாட்டு அறையை தொடர்புகொண்டு, பிரச்னைகளை தெரிவிக்கலாம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X