முக்கிய நகரங்களில் ரெம்டெசிவர்: அதிகாரிகளுக்கு ஸ்டாலின் உத்தரவு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (44) | |
Advertisement
சென்னை: சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், 'ரெம்டெசிவிர்' மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு உயர் அதிகாரிகளுக்கு, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்தர்
remdesivir,MKStalin,Stalin,ஸ்டாலின்,ரெம்டெசிவர்

சென்னை: சென்னையை தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய நகரங்களிலும், 'ரெம்டெசிவிர்' மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அரசு உயர் அதிகாரிகளுக்கு, ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

தமிழகத்தில், கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் சூழலில், தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, தலைமை செயலர் ராஜிவ் ரஞ்சன், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக கமிஷனர் பணீந்தர் ரெட்டி, பேரிடர் மேலாண்மை கமிஷனர் ஜெகநாதன் ஆகியோருடன், ஸ்டாலின் நேற்று தன் ஆழ்வார்பேட்டை இல்லத்தில் ஆலோசனை நடத்தினார்.


latest tamil newsபின், அதிகாரிகளுக்கு, அவர் பிறப்பித்த உத்தரவுகள்:

* கொரோனா தடுப்பு மற்றும் மருத்துவ சிகிச்சைகளை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை, எவ்வித தொய்வுமின்றி, முழு முனைப்புடன் மேற்கொள்ள வேண்டும்.

* தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளில், அதிக பாதிப்பு உள்ளவர்களுக்கு, சென்னையில் ரெம்டெசிவிர் மருந்துகள் அரசால் வழங்கப்படுவது போல, தமிழகத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வழங்க, நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

* நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மருத்துவ சிகிச்சைகளுக்கு தேவையான படுக்கை வசதிகள், ஆக்சிஜன் மற்றும் மருந்து பொருட்கள் அனைத்தும், தங்கு தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (44)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Matt P - nashville,tn ,யூ.எஸ்.ஏ
05-மே-202102:54:57 IST Report Abuse
Matt P விரைவில் மேலசபை வந்து தோற்ற மன்ற உறுப்பினர்களெல்லாம் மந்திரி அவாங்க. பெண்களுக்கேல்லாம் மாதா மாதா பணம் .. கோட்டையிலே சுடலைக்கு இப்போ கொண்டாட்டம் என்ற பாடல் விரைவில் வெளி வரலாம்.
Rate this:
Cancel
J. G. Muthuraj - bangalore,இந்தியா
04-மே-202119:05:23 IST Report Abuse
J. G. Muthuraj கொரோனா ஒழிப்புக்கு என்றே ஒரு TASK FORCE ஆரம்பியுங்கள் தளபதியாரே....பல துறைகளை சேர்ந்த அதிகாரிகள் சரிப்பட்டு வரமாட்டார்கள்....இந்த TASK FORCE க்கு சிறப்பு அதிகாரம் கொடுத்து நேரடியாக முதல்வருக்கு கீழாக வேலை செய்யும்படி அமர்த்துங்கள்..மருந்துகள் சப்ளை ....ஆக்சிஜன் கிடைக்க ஏற்பாடுகள்.. மருத்துவ மனை படுக்கை எல்லோருக்கும் கிடைக்கும்படி செய்தல்....இவைகள் அனைத்தையும் துரிதமாக செய்துமுடிக்கும் பொறுப்பு, அதிகாரங்களை அவர்களிடம் ஒப்படையுங்கள். கட்சிக்கு அப்பாற்பட்டு, திறமை, சேவை மனப்பாண்மை உள்ளோரை இந்த குழுவில் உறுப்பினர்களாக சேருங்கள். தினந்தோறும் இரண்டு அல்லது மூன்று முறை TASK FORCE ஐ சந்தியுங்கள்....பழைய அரசு சொன்னதையே நீங்களும் சொல்லிக்கொண்டிருக்காதீர்கள்.....
Rate this:
Cancel
Anand - chennai,இந்தியா
04-மே-202114:48:37 IST Report Abuse
Anand ரெம்டெசிவர் அப்படின்னு சூசையால் சொல்லமுடியுமா?
Rate this:
P. S. Ramamurthy - Chennai,இந்தியா
04-மே-202118:50:14 IST Report Abuse
P. S. RamamurthyHow can he instruct the Officials now itself. This shows the DMK attitude. God SAVE Tamil Nadu....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X