பொது செய்தி

இந்தியா

கொரோனா தடுப்பு மருத்துவ பணியாளர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: 'கொரோனா தொற்றை தடுக்கும் மருத்துவப் பணிகளில், 100 நாட்கள் வரையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு, வருங்காலங்களில், அரசு பணி வேலைவாய்ப்புகளின்போது, முன்னுரிமை வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்றை எதிர்த்து, நாடு முழுவதும் நடந்து வரும் போரில், ஏராளமான மருத்துவ

புதுடில்லி: 'கொரோனா தொற்றை தடுக்கும் மருத்துவப் பணிகளில், 100 நாட்கள் வரையில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு, வருங்காலங்களில், அரசு பணி வேலைவாய்ப்புகளின்போது, முன்னுரிமை வழங்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.



latest tamil news



பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா தொற்றை எதிர்த்து, நாடு முழுவதும் நடந்து வரும் போரில், ஏராளமான மருத்துவ பணியாளர்கள், தங்களை அர்ப்பணித்து, உறுதியுடன் போராடி வருகின்றனர்.


அங்கீகாரம்


இவர்களுக்கு ஊக்கமளிக்கவும், இப்பணிகளில் ஈடுபடுவோரின் எண்ணிக்கையையும், போதுமான அளவில் உறுதிப்படுத்தும் வகையிலும், பிரதமர் நரேந்திர மோடி, சில முக்கிய நடவடிக்கை களுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளார்.இதன்படி, முதுநிலை மருத்துவ படிப்புக்கான, 'நீட்' நுழைவுத் தேர்வு, அடுத்த நான்கு மாதங்களுக்காவது ஒத்திவைக்கப்படும். தேர்வு தேதிக்கு முன்பாக, ஒரு மாதம் அவகாசம் அளித்து, புதிய அறிவிப்பு வெளியாகும்.


latest tamil news



கொரோனா தொற்றை தடுக்கும் பணிகளில், மருத்துவ பணியாளர்கள் பலரும் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில், தொடர்ந்து, 100 நாட்கள் மருத்துவ பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்களுக்கு, எதிர்காலத்தில், அரசு பணி வேலை வாய்ப்புகளின்போது, முன்னுரிமை வழங்கப்படும்.படிப்பு முடித்து பயிற்சி யில் உள்ள மாணவர்கள், கொரோனா தடுப்பு மருத்துவ பணிகளில் ஈடுபடுத்தப்படுவர்.

துறைத்தலைவர்கள், பேராசிரியர்களின் கீழ், அவர்களது வழிகாட்டுதலின்படி, மருத்துவ பணிகளில் இறங்கலாம்.இறுதி ஆண்டு படிக்கும், எம்.பி.பி.எஸ்., மருத்துவ மாணவர்களையும், மருத்துவ பணிகளில் ஈடுபடுத்தலாம்.பி.எஸ்.சி., நர்சிங் படித்து, உரிய தகுதிகளுடன் இருக்கும் நர்சுகளை, கொரோனா தொற்று வார்டுகளில், மூத்த டாக்டர்கள் மற்றும் நர்சுகளின் கண்காணிப்பு மற்றும் வழிகாட்டுதல்களின்படி, பணிகளில் ஈடுபடுத்தலாம்.


விருது


தொடர்ந்து, 100 நாட்கள் கொரோனோ தடுப்பு மருத்துவ பணிகளில் ஈடுபட்டிருந்த மருத்துவ பணியாளர்களின் மதிப்புமிகு சேவையை பாராட்டி, கவுரவிக்கும் வகையில், பிரதமர் சார்பில், தேசிய விருதுகள் வழங்கப்படும்.இவ்வாறு அதில், கூறப்பட்டுள்ளது.இந்த அறிவிப்பின் காரணமாக, முதுநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு, வரும் ஆக., 31 க்கு முன் நடைபெறுவதற்கு வாய்ப்பில்லை என்பது உறுதியாகியுள்ளது.
- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muthu Kumarasamy - Mettupalayam, Coimbatore Dist.,இந்தியா
04-மே-202115:22:58 IST Report Abuse
Muthu Kumarasamy நூற்றி எட்டு ஆம்புலன்ஸில் பணியாற்றும் வூழியர்கள் இன்னும் தாற்காலியமாகவே பணியாற்றுகிறார்கள். அவர்கள் சேவை மகத்தானது.அவர்களை நிரந்தரமாக ஆக்க ஏற்பாடு செய்ய வேண்டும்
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
04-மே-202113:54:23 IST Report Abuse
தமிழ்வேள் வாழ்த்துக்கள்....திராவிஷமும் ஹிந்து விரோத நாஸ்திகமும் மெல்ல இனி சாகும் ....புதிய விடியல் பிறக்கட்டும் ..சொரியான் கருத்தியலும் சிலைகளும் அழியட்டும் ....
Rate this:
Cancel
S. Narayanan - Chennai,இந்தியா
04-மே-202109:00:08 IST Report Abuse
S. Narayanan Thanks to மோடிஜி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X