அரசியல் செய்தி

தமிழ்நாடு

ரெண்டு ஓட்டு வாங்குனது மூணு பேரு; மூணு ஓட்டு வாங்குனது ரெண்டு பேரு!

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
கரூர்: 'விளையாட்டுல ஜெயிக்கிறமா, தோற்கிறோமாங்கிறது முக்கியமில்லை; ஆனா விளையாடணும்!' என்று 'வெற்றிவிழா' படத்தில் ஒரு வசனம் வரும். இது விளையாட்டுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் பலருக்கு தேர்தலே விளையாட்டாகத்தான் இருக்கிறது.தேர்தல் வந்து விட்டால், போட்டி போடுவதற்கு சுயேட்சையாக பல ஆயிரம் பேர் களம் இறங்கிவிடுகின்றனர். முக்கிய வேட்பாளர்களின்
Tamilnadu, ElectionResult, Independent Candidates, சுயேட்சை, வேட்பாளர், ஓட்டு, தேர்தல் முடிவுகள்

கரூர்: 'விளையாட்டுல ஜெயிக்கிறமா, தோற்கிறோமாங்கிறது முக்கியமில்லை; ஆனா விளையாடணும்!' என்று 'வெற்றிவிழா' படத்தில் ஒரு வசனம் வரும். இது விளையாட்டுக்குச் சரியாக இருக்கலாம். ஆனால் தமிழகத்தில் பலருக்கு தேர்தலே விளையாட்டாகத்தான் இருக்கிறது.

தேர்தல் வந்து விட்டால், போட்டி போடுவதற்கு சுயேட்சையாக பல ஆயிரம் பேர் களம் இறங்கிவிடுகின்றனர். முக்கிய வேட்பாளர்களின் பெயர்களில் இருப்பவர்கள் பலர், சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்து, பின்பு எதையாவது வாங்கிக் கொண்டு வாபஸ் பெற்றுக்கொள்வதும் நிறைய நடக்கிறது. சுயேட்சைகள் வாங்கும் ஓட்டுக்கள், பல தொகுதிகளில் முக்கியக் கட்சி வேட்பாளர்களையே கவிழ்த்து விடுவதுண்டு. இத்தகைய சுயேட்சைகளுக்கு நண்பர்களும், உறவினர்களும்தான் ஓட்டுப்போடுவர். ஆனால், ஒரு சில சுயேட்சைகளுக்கு சொந்த வீட்டிலேயே ஓட்டுப் போடாமல் புறக்கணிப்பதும் நடக்கிறது. இப்படி ஒற்றை இலக்கத்தில் ஓட்டு வாங்குபவர்கள், அதைப் பெருமையாகவும் சொல்லிக்கொள்வர்.


latest tamil news


இந்தத் தேர்தலில் ஒற்றை இலக்கத்தில் வாங்கியவர்களின் எண்ணிக்கை மிகமிகக் குறைவாகத்தான் உள்ளது. கரூர் தொகுதியில் மட்டும்தான், ஒற்றை இலக்கத்தில் ஓட்டு வாங்கியவர்கள் அதிகம். இந்தத் தொகுதியில் மொத்தம், 77 பேர் வேட்பாளர்களாக களம் கண்டனர். ஒவ்வொரு வேட்பாளரையும் வாக்காளர்கள் தேடிப்பிடித்து ஓட்டுப்போடுவதே பெரிய கஷ்டமாக இருந்திருக்கும். இதனால் 19 பேர் ஒற்றை இலக்கத்தில் மட்டுமே ஓட்டு வாங்கியுள்ளனர். சக்திகுமார், செந்தில்குமார், மணிகண்டன் என மூன்று பேர், தலா இரண்டு ஓட்டுக்கள் மட்டுமே வாங்கி புதிய சாதனை படைத்துள்ளனர்.

புஷ்பராஜ், மணிவண்ணன் என இரண்டு பேர், தலா மூன்று ஓட்டுக்களும் பெற்றுள்ளனர். மற்றவர்கள் 4, 5, 7, 8, 9 என்று தங்கள் பிரசாரத்திற்கேற்ப வாக்குகள் வாங்கியுள்ளனர். இதே தொகுதியில் 10 ஓட்டு வாங்கியவர்களும் பலர் உள்ளனர். அதேபோன்று துறைமுகம் தொகுதியிலும் நாகராஜ், மகாலிங்கம் என இரண்டு பேர், தலா 10 ஓட்டுக்கள் வாங்கி, மானத்தை கப்பலேற்றியுள்ளனர்.
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnamurthy Venkatesan - Chennai,இந்தியா
04-மே-202119:48:21 IST Report Abuse
Krishnamurthy Venkatesan இவர்களுக்கு நண்பர்கள் யாரும் இல்லை போல. பாவம்.
Rate this:
Cancel
V. Manoharan - Bangalore,இந்தியா
04-மே-202113:57:53 IST Report Abuse
V. Manoharan இரண்டு ஒட்டு, மூன்று ஒட்டு என்று வாங்கி விட்டோமே என மனதை தளர விட்டு விட கூடாது. தோல்வியே வெற்றிக்கு அறிகுறி. வருகின்ற தேர்தல்களிலும் நின்று இரண்டு,மூன்று என்பதை ஏழு, எட்டு என மாற்றி காட்ட வேண்டும்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
04-மே-202113:52:31 IST Report Abuse
A.George Alphonse இதுதான் சொந்த காசிலேயே சூனியம் வைத்துக்கொள்வதாகும் போலும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X