விவாகரத்து முடிவை அறிவித்த பில் கேட்ஸ் தம்பதி

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (27)
Share
Advertisement
வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா, 27 ஆண்டு திருமண வாழ்விற்கு பின் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.உலகின் செல்வந்த ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதி தங்களது விவாகரத்து முடிவை டுவிட்டரில் அறிவித்துள்ளனர். விவாகரத்து முடிவை அறிவித்தாலும் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி மற்றும் பிற காரணங்களுக்கான திட்டங்களுக்கு
BillGates, Couples, Divorce, பில் கேட்ஸ், தம்பதிகள், விவாகரத்து

வாஷிங்டன்: மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா, 27 ஆண்டு திருமண வாழ்விற்கு பின் விவாகரத்து முடிவை அறிவித்துள்ளனர்.

உலகின் செல்வந்த ஜோடிகளான பில்கேட்ஸ் தம்பதி தங்களது விவாகரத்து முடிவை டுவிட்டரில் அறிவித்துள்ளனர். விவாகரத்து முடிவை அறிவித்தாலும் உலகளாவிய சுகாதாரம், பாலின சமத்துவம், கல்வி மற்றும் பிற காரணங்களுக்கான திட்டங்களுக்கு நிதியளிக்கும் பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையில் தங்கள் கூட்டுப் பணிகளைத் தொடரப் போவதாகக் தெரிவித்துள்ளனர்.


latest tamil news



65 வயதான பில்கேடஸ் உலகின் மதிப்புமிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார். அதன் 2008-ம் ஆண்டு மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாகி பதவியில் இருந்து விலகினார். பில் கேட்ஸ் தனது அறக்கட்டளை மூலம் உலகமெங்கும் தொண்டு செய்து வந்தார். 56 வயதான மெலிண்டா கேட்ஸ் 1987-ம் ஆண்டு பில் கேட்ஸை சந்தித்தார். இவர்கள் இருவரும் 1994-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். பில் கேட்ஸ் தனது மனைவி மெலிண்டா பெயரில் அறக்கட்டளை நிறுவி பல தொண்டு சேவைகளுக்காக நிதியளித்து வருகிறார். தற்போது இவர்கள் இருவரும் திருமண வாழ்வில் இருந்து பிரிவதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.


latest tamil news



இது தொடர்பாக பில் கேட்ஸ் தம்பதி வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 27 ஆண்டுகளில் 3 குழந்தைகளை வளர்த்துள்ளோம். உலகம் முழுவதும் பரந்து செயல்படும் அறக்கட்டளை ஒன்றையும் நிறுவி, அதனால் அனைத்து தரப்பு மக்களும் சுகாதாரமுடன் வாழ்வதற்கான உதவிகளை செய்து வந்துள்ளோம். இந்த பணியில் இணைந்து தொடர இருக்கிறோம். எனினும், எங்களது திருமண வாழ்வை முடித்து கொள்ள நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்களுடைய வாழ்வின் அடுத்த கட்டத்தில் ஒன்றாக இணைந்து, தம்பதியாக வளர்ச்சி அடைவதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை' எனத் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
05-மே-202101:32:48 IST Report Abuse
naadodi தவறே இல்லை..இதுதான் வானப்ரஸ்தம். நான்கு ஆசிரமங்களில் ஒன்று. (பிரம்மச்சர்யம், க்ரஹஸ்தம், சன்யாசம், வானப்ரஸ்தம்). பொறுப்புகள் முடிந்தபின் தனியே தொடரும் வாழ்வு..இருவரும் வெற்றி பெறட்டும்.
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
04-மே-202116:46:01 IST Report Abuse
thamodaran chinnasamy புத்தியே இல்லாத புத்திசாலிகள் இவர்கள், இவர்களின் இந்த கூற்று ஏற்கமுடியாத ஒன்று . மேலும் இனிமேல் தான் இருவரும் இனைந்து நிம்மதியான வாழ்க்கை நடத்தவேண்டிய தருணம். இதற்குமேல் தான் ஒருவருடைய உதவி ஒருவருக்கு தேவைப்படும். இவர்கள் அவர்களின் கூற்றை நன்றாக யோசிக்க வேண்டும் .
Rate this:
Cancel
mannandhai -  ( Posted via: Dinamalar Android App )
04-மே-202115:41:23 IST Report Abuse
mannandhai விவாக‌ர‌த்திற்கான‌ கார‌ண‌ம் என்று குறிப்பிட‌ப்ப‌ட்டுள்ள‌து தெளிவாக‌ இல்லை.சில‌ அற‌க்க‌ட்ட‌ளைக‌ளில், லாப‌ நோக்க‌ம் இல்லாத‌ கார‌ண‌த்தால், உறுப்பின‌ர்க‌ளின் குடும்ப‌ங்க‌ளில் சில‌ த‌னிப்ப‌ட்ட‌ செல‌வுக‌ளை செய்துகொள்ள‌ அனும‌திப்ப‌ர்க‌ள். செய்த‌ செல‌வு அற‌க‌ட்ட‌ளையின் வ‌ர‌வு-செல‌வு க‌ண‌க்கின் கீழ் வ‌ந்துவிடும். ஒருவேளை ஒரு குடும்ப‌மாக‌ இருந்தால் ஒரு ல‌ட்டு தானே கிடைக்கும். க‌ண்ணாக்க‌ள் இருவ‌ரும் ஆளுக்கொன்று என்று இர‌ண்டு ல‌ட்டு தின்ன‌ ஆசைப்ப‌ட்டு பிரிந்து இய‌ங்க‌ப் போகிறார்க‌ளோ என்ன‌வோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X