பொது செய்தி

இந்தியா

கொரோனா தாக்கம் அதிகரிப்பு: டில்லியில் 200 தற்காலிக படுக்கை அமைப்பு

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது.'கடந்த 24 மணி நேரத்தில் 3.57 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 759 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்' என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.இந்நிலையில், புதுடில்லி

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் 2வது அலை தீவிரமாகப் பரவி வருகிறது.

'கடந்த 24 மணி நேரத்தில் 3.57 லட்சத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்; 3,449 பேர் உயிரிழந்துள்ளனர். அதே சமயத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று லட்சத்து 20 ஆயிரத்து 759 நோயாளிகள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்' என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.



latest tamil news




இந்நிலையில், புதுடில்லி மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை நிரம்பி வழிவதால் மருத்துவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்க முடியாமல் தடுமாறி வருகின்றனர். இதனால், குருத்வாரா ரிகட் கான் சாஹிப் பகுதியில் தற்காலிகமாக 200 படுக்கைகள் அமைக்கப்பட்டு ஆக்சிஜன் சிலிண்டர்களில் நோயாளிகளுக்கு ஆக்சிஜன் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


latest tamil news



தெற்காசிய கண்டத்தில் இந்தியா மட்டுமல்லாமல் தாய்லாந்து, லாவோஸ் உள்ளிட்ட பல நாடுகள் வைரஸ் தாக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதற்கு முக்கியக் காரணம் இரண்டாவது அலை முதல் அலையைக் காட்டிலும் வீரியம் அதிகமானதாக உள்ளதாலும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியாமல் போனதாலும்தான் எனத் தெரியவந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.P. Barucha - Pune,இந்தியா
04-மே-202112:38:02 IST Report Abuse
S.P. Barucha இரண்டாவது அலை முதல் அலை கிடையாது.இது சீதோஷண வேறுபாட்டால் வருவது.
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
04-மே-202112:06:14 IST Report Abuse
Devanand Louis சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில்( தமிழ் நாடு எலக்ட்ரிகல் லைசென்சிங் போர்டு ) லஞ்சம் வாங்கும் கொடுமையான தொழில், நிர்வாக சீர்கேடு ,தமிழ் நாடு அரசின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல், அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் லஞ்சம் வாங்குவதுதான் அவர்களின் தலையாய வேலை, லஞ்சம் கொடுக்காமல் எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது, பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து எல்லா அலுவல் பணிகளுக்கும் லஞ்சம் கேட்கிறார்கள் மேலும் தமிழ் நாடு அரசுக்கு வரும் வருவாயை வரவிடாமல் கெடுக்கிறார்கள். கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் சென்னை-கிண்டி மின்சார உரிமம் வழங்கும் வாரியத்தின் மனித நேயமில்லாத லஞ்சம் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் சென்னை-கிண்டி மின் உரிமம் வழங்கும் அலுவலகத்தில் இந்த கேடுகெட்ட வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X