பொது செய்தி

தமிழ்நாடு

மாநகராட்சி அலுவலகத்தில் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு

Added : மே 04, 2021
Share
Advertisement
ஈரோடு: மாநகர பகுதியில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் முன்கள பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்களும் ஆளாகி வருகின்றனர்.கடந்த வாரம் நான்காம் மண்டலத்தில் பணிபுரியும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அவர் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு வந்து சென்றார். இதனால் பிரதான அலுவலக பணியாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் மெயின் அலுவலகத்தில் சுகாதார பணி

ஈரோடு: மாநகர பகுதியில், நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதில் முன்கள பணியாளர்கள், மாநகராட்சி ஊழியர்களும் ஆளாகி வருகின்றனர்.
கடந்த வாரம் நான்காம் மண்டலத்தில் பணிபுரியும் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. அவர் மாநகராட்சி பிரதான அலுவலகத்துக்கு வந்து சென்றார். இதனால் பிரதான அலுவலக பணியாளர் ஒருவருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் மெயின் அலுவலகத்தில் சுகாதார பணி நடந்தது. நேற்று முதல்தான் அப்பகுதி செயல்பாட்டுக்கு வந்தது. இதையடுத்து மாநகராட்சி அலுவலகத்தின், முன் கதவு அடைக்கப்பட்டு மக்கள் உள்ளே வர, பல்வேறு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடல் வெப்பநிலை பரிசோதித்த பிறகே, எந்த அதிகாரியை பார்க்க வேண்டுமோ, அவரை மட்டுமே பார்த்து திரும்ப, மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர். உள்ளே சென்றவர் வந்த பிறகே அடுத்தவர் அனுமதிக்கப்படுகிறார். உள்ளே வரும் போதும், வெளியில் செல்லும்போதும் சானிடைசர் தடவுவது கட்டாயம் என, பல கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. முடிந்தளவு மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவிக்க வரும் மக்கள், போனில் தெரிவிக்கலாம் என்றும், மாநகராட்சி அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.



Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X