பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவுக்கு பெண் பலி; தனிமைப்படுத்தப்பட்ட வீதி

Added : மே 04, 2021
Share
Advertisement
கோபி; கோபி, மொடச்சூர் அருகே மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, 70 வயது முதியவர் சமீபத்தில் இறந்தார். அவரின் துக்க காரியத்துக்கு, மொடச்சூர் அருகே பெரியண்ணன் வீதியை சேர்ந்த, ஒரு குடும்பத்தினர் சென்றனர். இதனால் அந்த குடும்பத்தை சேர்ந்த, 6, 10, 39 வயது ஆண்கள் மற்றும் 34, 35 வயது பெண்கள் என ஐந்து பேருக்கு, கொரோனா பாதித்தது. நேற்று உறுதி செய்யப்பட்டது. தவிர, கோபி, எஸ்.டி.என்., காலனியை

கோபி; கோபி, மொடச்சூர் அருகே மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த, 70 வயது முதியவர் சமீபத்தில் இறந்தார். அவரின் துக்க காரியத்துக்கு, மொடச்சூர் அருகே பெரியண்ணன் வீதியை சேர்ந்த, ஒரு குடும்பத்தினர் சென்றனர். இதனால் அந்த குடும்பத்தை சேர்ந்த, 6, 10, 39 வயது ஆண்கள் மற்றும் 34, 35 வயது பெண்கள் என ஐந்து பேருக்கு, கொரோனா பாதித்தது. நேற்று உறுதி செய்யப்பட்டது. தவிர, கோபி, எஸ்.டி.என்., காலனியை சேர்ந்த, ஒரு குடும்பத்தை சேர்ந்த, 10 மற்றும் 41 வயது ஆண், 12 மற்றும் 37 வயது பெண் ஆகியோருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இதேபோல், டி.ஆர்.ஆர்., நகரில், ஒரே குடும்பத்தை சேர்ந்த, 57 வயது ஆண், 35 மற்றும் 51 வயது பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இவர்களில், 51 வயது பெண், பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் இறந்தார். இதனால் அப்பெண் வசித்த வீட்டின் அருகே, ஐந்து வீடுகளை சேர்ந்த, 15 பேருக்கு சளிமாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் அந்த வீடுகளை தனிமைப்படுத்தி, தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X