தமிழ்நாடு

எளிமை, அணுகுமுறையால் முத்துசாமி, திருமகன் வெற்றி: சொந்த கட்சியினரே கைவிட்டதால் ராமலிங்கம், யுவராஜா தோல்வி

Added : மே 04, 2021
Share
Advertisement
ஈரோடு: எளிமை மற்றும் அணுகுமுறையால் திமுகவின் முத்துசாமி, காங்., திருமகன் வென்ற நிலையில், சொந்த கட்சியினரே கைவிட்டதால், ராமலிங்கம், யுவராஜா தோல்வியை தழுவினர்.ஈரோடு மேற்கில் மூன்றாம் முறையாக அ.தி.மு.க., வேட்பாளராக ராமலிங்கம், ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில், த.மா.கா., மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா போட்டியிட்டனர். ஆனால் இருவருமே தோல்வியை தழுவினர். தி.மு.க.,

ஈரோடு: எளிமை மற்றும் அணுகுமுறையால் திமுகவின் முத்துசாமி, காங்., திருமகன் வென்ற நிலையில், சொந்த கட்சியினரே கைவிட்டதால், ராமலிங்கம், யுவராஜா தோல்வியை தழுவினர்.


ஈரோடு மேற்கில் மூன்றாம் முறையாக அ.தி.மு.க., வேட்பாளராக ராமலிங்கம், ஈரோடு கிழக்கில் அ.தி.மு.க., இரட்டை இலை சின்னத்தில், த.மா.கா., மாநில இளைஞரணி தலைவர் யுவராஜா போட்டியிட்டனர். ஆனால் இருவருமே தோல்வியை தழுவினர். தி.மு.க., கூட்டணி பலம், எளிமையானவர், அ.தி.மு.க.,வினரும் அணுகும் முறையால், ராமலிங்கத்தை எதிர்த்து களமிறங்கிய முத்துசாமி அதிக ஓட்டில் வென்றார். அதேசமயம் ராமலிங்கத்தை அ.தி.மு.க., பகுதி செயலாளர்கள் ஜெகதீசன், கேசவமூர்த்தி, கோவிந்தராஜ், முருகுசேகரை தாண்டி யாரும் அணுக முடியாது. துப்புரவு பணியாளர், சத்துணவு பணி, இடமாற்றம், போலீஸ் ஸ்டேஷன் பிரச்னைக்கு கூட கட்சியினரே ஆனாலும் பணம் தந்தால்தான் காரியம் நடக்கும். தவிர, ஈரோடு கிழக்கு அல்லது மேற்கை பிடிக்க கே.சி.பழனிசாமி, மல்லிகா பரமசிவம், மனோகரன், மணல் குணசேகரன், பி.சி.ராமசாமி என பலர் முயன்று தோற்றதால ஒதுங்கினர். இறுதி நேர கவனிப்புகளும் வீடு சேராததால், அதிக வித்தியாசத்தில் ராமலிங்கம் தோற்றார்.

ஈரோடு கிழக்கில் காங்., திருமகன் ஈவெரா, 8,904 ஓட்டில் வென்றார். தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் மகன், ஈவெராவின் கொள்ளு பேரன், எளிமையானவர், யாரும் சந்திக்கலாம் என்ற பெயர் திருமகன் ஈவெராவுக்கு கிடைத்தது. கூட்டணி கட்சியினர் பலத்தால், அதிக அறிமுகம் இல்லாத நிலையிலும் வென்றார். யுவராஜாவை எளிதில் யாரும் சந்திக்க முடியாது. போனில் கூட தொடர்பு கொள்ள முடியாது. இவரது ஜாதி ரீதியான அணுகுமுறை, பிற சமூகத்தினர் ஓட்டும், கிழக்கு தொகுதியில் உள்ள, 35 ஆயிரம் சிறுபான்மையினர் ஓட்டு பறிபோனது. 'இப்பகுதியில் சிறுபான்மையினர் அதிகம் உள்ளதால், தன்னுடன் பிரசாரத்துக்கு பா.ஜ.,வினர் வர வேண்டாம்; வந்தாலும் பா.ஜ., கொடி, காவி நிற துணிகள், கோஷம் எழுப்ப வேண்டாம்' என யுவராஜாவே கேட்டு கொண்டதால், பலரும் ஒதுங்கினர். அ.தி.மு.க., கூட்டணியில் உள்ள சிறுபான்மையினர் சார்ந்த கட்சிகள், அமைப்புகள் கூட, ஒதுங்கினர். அதைவிட நெருங்கியவர்கள், உறவினர்கள் மூலமே கடைசி நேர கவனிப்பு நடந்தது. தங்களுக்கு சீட் கிடைக்காததாலும், அ.தி.மு.க.,வினர் ஒதுங்கியதாலும், யுவராஜா தோல்வியை தழுவினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X