பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகரை 2வது முறையாக தக்கவைத்த அ.தி.மு.க.,

Added : மே 04, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் (தனி) தொகுதியை, இரண்டாவது முறையாக, அ.தி.மு.க., தக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பில், சத்தியமங்கலம் தொகுதி நீக்கப்பட்டு, பவானிசாகர் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. பவானிசாகர் தனி தொகுதியில், 2011ல் அ.தி.மு.க., கூட்டணியில், இ.கம்யூ., பி.எல்.சுந்தரம், 2016ல் அ.தி.மு.க., ஈஸ்வரன் வென்றனர். இம்முறை அ.தி.மு.க.,வில் பண்ணாரி, தி.மு.க.,

புன்செய்புளியம்பட்டி: பவானிசாகர் (தனி) தொகுதியை, இரண்டாவது முறையாக, அ.தி.மு.க., தக்க வைத்துள்ளது. ஈரோடு மாவட்டத்தில் தொகுதி மறு சீரமைப்பில், சத்தியமங்கலம் தொகுதி நீக்கப்பட்டு, பவானிசாகர் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. பவானிசாகர் தனி தொகுதியில், 2011ல் அ.தி.மு.க., கூட்டணியில், இ.கம்யூ., பி.எல்.சுந்தரம், 2016ல் அ.தி.மு.க., ஈஸ்வரன் வென்றனர். இம்முறை அ.தி.மு.க.,வில் பண்ணாரி, தி.மு.க., கூட்டணியில் இ.கம்யூ., சுந்தரம் உள்பட ஆறு பேர் மட்டுமே போட்டியிட்டனர். சுயேச்சைகள் களமிறங்காத தொகுதியாகவும் அமைந்தது. ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்றில் மட்டுமே முன்னிலை வகித்த இ.கம்யூ., வேட்பாளர் சுந்தரம், 27 சுற்றுவரை பின்தங்கினார். கடைசி வரை முன்னிலையில் இருந்த பண்ணாரி, 16 ஆயிரத்து, எட்டு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியை வசமாக்கினார். இதன் மூலம் தொகுதியை இரண்டாவது முறையாக அ.தி.மு.க., தக்க வைத்துக் கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X