பொது செய்தி

இந்தியா

3 மாதங்களுக்கு தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்: சீரம் அதிகாரி தகவல்

Updated : மே 04, 2021 | Added : மே 04, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: 'மத்திய அரசு ஆர்டர் கொடுக்காததால் இந்தியாவில் மேலும் மூன்று மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்' என, சீரம் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார். கொரோனாவுடன் போராடி வரும் இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கோவாக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்டை புனேவில்

புதுடில்லி: 'மத்திய அரசு ஆர்டர் கொடுக்காததால் இந்தியாவில் மேலும் மூன்று மாதங்களுக்கு கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு நீடிக்கும்' என, சீரம் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.



latest tamil news



கொரோனாவுடன் போராடி வரும் இந்தியாவில் தற்போது கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளன. கோவாக்சின் மருந்தை ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனமும், கோவிஷீல்டை புனேவில் உள்ள சீரம் நிறுவனமும் தயாரித்து வருகின்றன. இந்த இரு நிறுவனங்களிடமும் இருந்து தடுப்பூசியை கொள்முதல் செய்யும் மத்திய அரசு, 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தி வருகிறது.
தடுப்பூசி திட்டத்தை வேகப்படுத்தும் விதமாக சீரம் நிறுவனத்திடம் இருந்து 10 கோடி டோஸ் மருந்துகளையும், பாரத் பயோடெக் நிறுவனத்திடம் இருந்து 2 கோடி டோஸ் மருந்துகளையும் மத்திய அரசு ஆர்டர் செய்துள்ளது. ஆனால் இது போதுமானது அல்ல. தேவையான டோஸ்கள் இல்லாததால், 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டத்தையும் மாநிலங்கள் தொடங்கவில்லை. அத்துடன் பல மாநிலங்கள் தடுப்பூசி மருந்து இல்லாமல் மத்திய அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கின்றன.


latest tamil news



சீரம் நிறுவனத் தலைமை செயல் அதிகாரி அடார் பூனவல்லா, ''தற்போது மாதத்திற்கு 7 கோடி டோஸ் வரை தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த உற்பத்தியை 10 கோடியாக உயர்த்தவுள்ளோம். இதைவிட அதிகமாக உற்பத்தி செய்ய நாங்கள் தயாராக இருந்தாலும், மத்திய அரசு ஆர்டர் எதுவும் கொடுக்கவில்லை. இப்போதுதான் சில மாநில அரசுகள் ஆர்டர் கொடுத்திருக்கின்றன. உற்பத்தியை விரிவாக்கம் செய்ய இருப்பதால், இன்னும் 3 மாதங்களில் தட்டுப்பாடு சரியாகும்,'' என, தெரிவித்துள்ளார்.
'தடுப்பூசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய பொதுத்துறை நிறுவனங்கள் மூலம் உற்பத்தியை செய்ய வேண்டும்' என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
04-மே-202113:20:49 IST Report Abuse
chandran, pudhucherry . தடுப்பூசி போட்டுக்கொள்ள நிறைய பேர் முன்வரவில்லை. நான் இரண்டாவது தடுப்பூசி போட்டுக்கொண்டேன் ஐந்து நாட்கள் ஆகிறது. என் அலுவலகத்தில் எவரும் முதல் டோஸ் கூட போட்டுக்கொள்ள முன்வரவில்லை. பீதியை யார் உருவாக்கினாங்க என எல்லாருக்கும் தெரியும். இப்ப சொடல முதல்வரா ஆயிட்டதால கொரணாவே தமிழ்நாட்டை விட்டு ஓடிவிட்டதாம். அதனால மாஸ்க் கூட தேவையில்லை என உபீஸ் போலீச மிரட்றாங்க. ஆபீஸ்குள்ள வரவே பயந்தவன் இப்ப கட்சி கொடிய கார்ல ஏத்திகிட்டு ஆபீஸ்குள்ள வந்து நிறுத்திட்டு கால்மேல கால்போட்டு உட்காந்திருக்கான். ஐந்து வருடம் என்னாகும்னு தெரியல.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மே-202115:53:37 IST Report Abuse
தமிழவேல் படிச்சவன்களே பீதியை நம்புறான்களா ? தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளது சகஜம்தான். இது உலகம் முழுதும் உள்ளது. அதற்காக தட்டுப்பாடு உள்ளதை மறைத்துப் பொய் பேச வேண்டாம்....
Rate this:
Cancel
ஆரூர் ரங் - சென்னை ,இந்தியா
04-மே-202112:33:30 IST Report Abuse
ஆரூர் ரங் வெளிநாட்டு தடுப்பூசிகளை அனுமதித்தது 🤔இவருக்குக் கசக்கிறது . ஏற்கனவே ஆர்டர் செய்ததது இன்னும் முழுமையாக டெலிவரி ஆகவில்லை. ஆயிரக்கணக்கான கோடி முன்பணம் கொடுத்தது கூட மறந்துவிட்டது
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
04-மே-202113:39:12 IST Report Abuse
தமிழவேல் காசையும் குடுத்து, பாதுகாப்பும் குடுத்து பத்திரமா, மல்லையா, நீரவ் மோடி, லலித்மோடி, நித்யானத்தா, கோர்ஸி அவன் மச்சான்னு... எல்லவனையும் போல வெளிநாட்டுக்கு பாதுகாப்பா அனுப்பி வச்சிட்டு பேச்ச பாரு.. ஊசிக்கு ஆரம்பத்தில எல்லாத்துக்கும் மோடி, மோடி. இப்போ மட்டும் எதுக்கெடுத்தாலும் சீரம் இன்ஸ்டிடுயூட்டா ?...
Rate this:
Narayanan Muthu - chennai,இந்தியா
04-மே-202119:01:17 IST Report Abuse
Narayanan Muthuஜெயிச்சா மோடி தோத்தா நேரு இதுவே எங்கள் வேதம்...
Rate this:
Cancel
Narayanan Muthu - chennai,இந்தியா
04-மே-202112:12:18 IST Report Abuse
Narayanan Muthu மூணு மாசத்துக்குள் இந்தியாவில் பலர் மூச்சு முட்டி முடிவுக்கு வந்து விடுவார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X