பொது செய்தி

தமிழ்நாடு

தட்டச்சு-கணினி பயிலகங்களை திறக்க அனுமதி; மாநில தலைவர் தலைமை செயலருக்கு மனு

Added : மே 04, 2021
Share
Advertisement
ஈரோடு: தட்டச்சு-கணினி பயிலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு தட்டச்சு - கணினி பள்ளிகள் சங்க மாநில தலைவர் செந்தில், தமிழக அரசின் தலைமை செயலருக்கு, மனு அனுப்பியுள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 2,200 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு காலத்தில், 2020ல் இவை முழுமையாக மூடப்பட்டு, செப்., மாதம் மீண்டும் திறக்கப்பட்டது.

ஈரோடு: தட்டச்சு-கணினி பயிலகங்களை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு தட்டச்சு - கணினி பள்ளிகள் சங்க மாநில தலைவர் செந்தில், தமிழக அரசின் தலைமை செயலருக்கு, மனு அனுப்பியுள்ளார்.


அதில் அவர் கூறியிருப்பதாவது: தமிழகத்தில், 2,200 அரசு அங்கீகாரம் பெற்ற தட்டச்சு பயிலகங்கள் உள்ளன. கொரோனா பாதிப்பு காலத்தில், 2020ல் இவை முழுமையாக மூடப்பட்டு, செப்., மாதம் மீண்டும் திறக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் அதிகரிப்பால், மீண்டும் தட்டச்சு மற்றும் கணினி பயிலகங்களை மூட அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே மூடப்பட்டதால், 10 ஆயிரம் குடும்பங்களுக்கு மேல் வாழ்வாதாரத்தை இழந்தோம். தட்டச்சு பயிற்சியை ஆன்லைனில் நடத்த முடியாது. பெரும்பாலான தட்டச்சு பயிற்சி மையங்கள், வாடகை கட்டடங்களில்தான் செயல்படுகின்றன. நீண்ட காலமாக மையங்களை மூடினால், வாடகையும் கொடுக்க முடியாது. தவிர, 2020 பிப்., மாதம் தேர்வுக்காக தயாரான, ஒன்றரை லட்சம் மாணவ, மாணவியர் தேர்வு எழுத முடியாத நிலையில் உள்ளனர். அனைத்து தட்டச்சு பயிற்சி மையங்களிலும், போதிய இடைவெளியில் ஒரு மணி நேரம் மட்டும் பயிற்சி அளிக்கப்படுகிறது. ஒரே நேரத்தில், மொத்தமாக யாரும் வர மாட்டார்கள். எனவே, பயிற்சி மையத்தை நடத்தி வருபவர்கள், மாணவ, மாணவியர் நலன் கருதி, விதிமுறைகளுடன் தட்டச்சு மற்றும் கணினி பள்ளிகளை திறந்து செயல்படுத்த அனுமதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதே மனுவை, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கும் அனுப்பியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X