அசைக்க முடியாத ஆச்சர்யம்: காங்கேயத்தில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அசைக்க முடியாத ஆச்சர்யம்: காங்கேயத்தில் வெற்றி பெறும் கட்சியே ஆட்சியை பிடிக்கும்

Added : மே 04, 2021
Share
சென்னிமலை: சட்டசபை தேர்தலில், காங்கேயம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே, ஆட்சி அமைக்க முடியும் என்ற சென்டிமென்ட், இந்த தேர்தலிலும் உறுதியாகியுள்ளது.காங்கேயம் சட்டசபை தொகுதி, 1952ல் உதயமானது. அன்று முதல் இங்கு எந்தக்கட்சி வெற்றி பெறுகிறதோ, அதுவே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று, தொகுதிவாசிகள் சென்டிமென்டாக வைத்துள்ளனர். இந்த கருத்து இந்த தேர்தலிலும்

சென்னிமலை: சட்டசபை தேர்தலில், காங்கேயம் தொகுதியில் வெற்றி பெறும் கட்சியே, ஆட்சி அமைக்க முடியும் என்ற சென்டிமென்ட், இந்த தேர்தலிலும் உறுதியாகியுள்ளது.


காங்கேயம் சட்டசபை தொகுதி, 1952ல் உதயமானது. அன்று முதல் இங்கு எந்தக்கட்சி வெற்றி பெறுகிறதோ, அதுவே தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் என்று, தொகுதிவாசிகள் சென்டிமென்டாக வைத்துள்ளனர். இந்த கருத்து இந்த தேர்தலிலும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், 1989ல் அ.தி.மு.க., ஜெ., மற்றும் ஜா., அணியாக பிரிந்தபோது, இங்கு ஜெ., அணி வெற்றி பெற்றது. ஆனால், அப்போது தி.மு.க., ஆட்சி அமைந்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் ஆட்சி கலைக்கப்பட்டது. இதனால் காங்கேயம் தொகுதியில், கூட்டணி கட்சி உட்பட எந்த கட்சி எம்.எல்.ஏ., வெற்றி பெறுகிறாரோ, அந்தக்கட்சிதான் இதுவரை தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர். கடந்த, 1977, 1980, 1984ல் இத்தொகுதியில் அ.தி.மு.க., வேட்பாளர்கள் வெல்ல, அக்கட்சி ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தது.

கடந்த, 1991ல் இந்த சென்டிமென்டுக்காகவே, காங்கேயத்தில் ஜெயலலிதா போட்டியிட்டார். அவர் வெற்றி பெற்று, ஆட்சியை கைப்பற்றினார். இதை தொடர்ந்து, ?996ல் தி.மு.க.,; 2001ல் அ.தி.மு.க.,; 2006ல் தி.மு.க.,; 2011ல் அ.தி.மு.க.,; 2016ல் அ.தி.மு.க., கூட்டணியில் தனியரசு வெற்றி பெற, அவர்கள் சார்ந்த கட்சியின் கொடி, புனித ஜார்ஜ் கோட்டையில் பறந்தது. இந்த தேர்தலில் முன்னாள் அமைச்சர் வெள்ளகோவில் சாமிநாதன் வெற்றி பெற, தி.மு.க., ஆட்சி அமைகிறது. இந்த வகையில், ?? ஆண்டுகளுக்கும் மேலாக, காங்கேயம் சென்டிமென்ட் தொடர்வதாக, தொகுதிவாசிகள் பெருமிதம் தெரிவிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X