பொது செய்தி

தமிழ்நாடு

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 4,511 கன அடியாக அதிகரிப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
பு.புளியம்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, குன்னூரில், 85 மி.மீ., கோத்தகிரி, 50, பர்லியாறு, 58, கீழ் கோத்தகிரி, 69, பில்லூர் அணை பகுதியில், 65 மி.மீ., மழை

பு.புளியம்பட்டி: நீர்ப்பிடிப்பு பகுதிகளில், மழை பெய்து வருவதால், பவானிசாகர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணை, நீர் பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப்பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக, பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி, குன்னூரில், 85 மி.மீ., கோத்தகிரி, 50, பர்லியாறு, 58, கீழ் கோத்தகிரி, 69, பில்லூர் அணை பகுதியில், 65 மி.மீ., மழை பெய்துள்ளது. இதனால் பவானிசாகர் அணைக்கு, நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம், 238 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மதியம், 4,233 கனஅடியாகவும், மாலையில், 4,511 கன அடியாக அதிகரித்தது. மாலை நிலவரப்படி, அணை நீர்மட்டம், 88.28 அடி, நீர் இருப்பு, 20.4 டி.எம்.சி.,யாக இருந்தது. அணையிலிருந்து அரக்கன்கோட்டை தடப்பள்ளி வாய்க்கால் பாசனத்துக்கு, 700 கனஅடி தண்ணீர், குடிநீருக்காக, 200 கன அடி என, 900 கன அடி தண்ணீர், பவானி ஆற்றில் திறக்கப்பட்டிருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X