சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தனியார் மேலாளர் வீட்டில் கைவரிசை

Added : மே 04, 2021
Share
Advertisement
கோபி: கோபியில், ஆயில் நிறுவன விற்பனை மேலாளர் வீட்டில், எட்டு பவுன் நகை, லேப்டாப்களை மர்ம நபர்கள் களவாடி சென்றனர். கோபி, நாகமலை எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 35; காட்பாடியில் தங்கி, வேலூரில் ஆயில் நிறுவனத்தில், விற்பனை மேலாளராக பணிபுரிகிறார். வாரம் ஒரு முறை மட்டுமே, கோபியில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வார். கடந்த, மார்ச், 20ல், சரவணனை பார்க்க அவரின் மனைவி கவுசல்யா

கோபி: கோபியில், ஆயில் நிறுவன விற்பனை மேலாளர் வீட்டில், எட்டு பவுன் நகை, லேப்டாப்களை மர்ம நபர்கள் களவாடி சென்றனர். கோபி, நாகமலை எக்ஸ்டென்சன் பகுதியை சேர்ந்தவர் சரவணன், 35; காட்பாடியில் தங்கி, வேலூரில் ஆயில் நிறுவனத்தில், விற்பனை மேலாளராக பணிபுரிகிறார். வாரம் ஒரு முறை மட்டுமே, கோபியில் உள்ள வீட்டுக்கு வந்து செல்வார். கடந்த, மார்ச், 20ல், சரவணனை பார்க்க அவரின் மனைவி கவுசல்யா மகனுடன் வேலூர் சென்றார். கடந்த ஏப்.,30ல், கோபியில் உள்ள வீட்டுக்கு சரவணன் திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது. பீரோவில் வைத்திருந்த எட்டு பவுன் நகை, அறையில் இருந்த இரு லேட்டாப்கள், காஸ் சிலிண்டர் களவு போயிருந்தது. சரவணன் புகாரின்படி, கோபி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X