பொது செய்தி

தமிழ்நாடு

பெருமாள் கோவில் பிரமோற்சவம் சப்தாபரணத்துடன் நிறைவு

Added : மே 04, 2021
Share
Advertisement
சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில், சித்திரை பிரமோற்சவ விழா கொரோனா கட்டுப்பாட்டால், பக்தர்கள் இன்றி சப்தாபரண அலங்காரத்துடன் நிறைவு பெற்றது. சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த ஏப்.,11ல் துவங்கியது. விழாவையொட்டி, பெருமாள் காலை, இரவில் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளினார். கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியதை தொடர்ந்து, ஏப்.,26

சேலம்: சவுந்தரராஜ பெருமாள் கோவில், சித்திரை பிரமோற்சவ விழா கொரோனா கட்டுப்பாட்டால், பக்தர்கள் இன்றி சப்தாபரண அலங்காரத்துடன் நிறைவு பெற்றது. சேலம், அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரமோற்சவ விழா கடந்த ஏப்.,11ல் துவங்கியது. விழாவையொட்டி, பெருமாள் காலை, இரவில் விதவிதமான வாகனங்களில் எழுந்தருளினார். கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவியதை தொடர்ந்து, ஏப்.,26 முதல் கோவில்களில் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, நடந்த திருக்கல்யாண உற்சவம், 81 கலச சிறப்பு திருமஞ்சனம், ஸ்ரீ ராமநவமி உற்சவங்கள் பக்தர்கள் இன்றி கோவில் பட்டாச்சாரியார்களை கொண்டு நடத்தப்பட்டது. பிரமோற்சவ நிறைவு விழா, வழக்கமாக மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் சுவாமி வீதி உலாவான சப்தாபரணத்துடன் நிறைவு பெறும். கட்டுப்பாடுகள் காரணமாக, நேற்று சுவாமி வீதி உலாவுக்கு பதில், கோவிலுக்குள்ளேயே பல வண்ண மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்ட பந்தலில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத சவுந்தரராஜர் சர்வ அலங்காரத்தில் எழுந்தருள செய்து சிறப்பு பூஜைகளுடன் நிறைவு பெற்றது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X