தமிழ்நாடு

சட்டசபை தேர்தல் பணி நிறைவு: திரும்ப பெறப்பட்ட 4,210 ஓட்டுப்பதிவு இயந்திரம்

Added : மே 04, 2021
Share
Advertisement
சேலம்: தேர்தல் பணிக்கு பயன்படுத்திய, 4,210 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் திரும்ப பெறப்பட்டன.நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அறிவிப்பு கடந்த பிப்.26ல், வெளியிடப்பட்டு, ஏப்., 6ல், தேர்தல் நடந்தது. அதற்கு இடைப்பட்ட காலத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து, வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், தேர்தல் பணி அலுவலர்களுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றி

சேலம்: தேர்தல் பணிக்கு பயன்படுத்திய, 4,210 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் திரும்ப பெறப்பட்டன.


நடந்து முடிந்த சட்டசபை தேர்தல் அறிவிப்பு கடந்த பிப்.26ல், வெளியிடப்பட்டு, ஏப்., 6ல், தேர்தல் நடந்தது. அதற்கு இடைப்பட்ட காலத்தில், ஓட்டுப்பதிவு இயந்திரம் குறித்து, வாக்காளர் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அத்துடன், தேர்தல் பணி அலுவலர்களுக்கும், ஓட்டுப்பதிவு இயந்திரம் பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது. அதற்கென சேலம் மாவட்டத்தில், 11 தொகுதிக்கும் தலா, 214 ஓட்டுப்பதிவு இயந்திரம், கட்டுப்பாடு கருவி, விவிபேடு ஒதுக்கீடு செய்யப்பட்டன. மொத்த ஓட்டுச்சாவடியில், 5 சதவீத எண்ணிக்கைக்கு ஏற்ப இயந்திரங்கள், தொகுதி வாரியாக பிரித்து, தனித்தனியே அனுப்பி தேர்தல் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதுதவிர, அவசர, அவசிய தேவைக்காக தொகுதிக்கு, 20 சதவீதம் ஓட்டுப்பதிவு இயந்திரம், அதற்கான கட்டுப்பாடு கருவி, 34 சதவீதம் விவிபேடு ஆகியன கூடுதலாக, ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டன. அதன்படி ஓட்டுப்பதிவு இயந்திரம், 1,321, கட்டுப்பாடு கருவி, 853, விவிபேடு, 1,394 ஆகியன, 11 தொகுதிக்கும் வழங்கப்பட்டன. தற்போது தேர்தல் முடிந்து விட்டதால், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கட்டுப்பாட்டில் இருந்த ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், மாவட்ட தேர்தல் பிரிவிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. மினி லாரிகளில், துப்பாக்கி போலீஸ் பாதுகாப்புடன் இயந்திரங்கள், கலெக்டர் அலுவலகத்துக்கு, கொண்டு வரப்பட்டன. அவைகளை, இயந்திரங்களின் நோடல் அதிகாரி அம்பாயிரநாதன் பெற்று கொண்டார். மொத்த இயந்திரங்கள், 4,210 ஐ, ஸ்ட்ராங் ரூமில், பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X