பொது செய்தி

தமிழ்நாடு

ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில் தாண்டவமாடுது கொரோனா

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரே நாளில், 101 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.சேலம் மாவட்டம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ஆத்தூர், நரசிங்கபுரம் நகரம், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் உள்பட எட்டு வட்டாரங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம், 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

ஆத்தூர்: ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நேற்று ஒரே நாளில், 101 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது.


சேலம் மாவட்டம், ஆத்தூர் சுகாதார மாவட்டத்தில், ஆத்தூர், நரசிங்கபுரம் நகரம், தலைவாசல், கெங்கவல்லி, பெத்தநாயக்கன்பாளையம், வாழப்பாடி, பனமரத்துப்பட்டி, அயோத்தியாப்பட்டணம் உள்பட எட்டு வட்டாரங்கள் உள்ளன. இவற்றில் மொத்தம், 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதுகுறித்து, சுகாதாரத்துறையினர் கூறுகையில், 'கொரோனா முதல் அலையின்போது, 14 நாளில் காய்ச்சல், சளி ஏற்பட்டது. அடுத்த மூன்று, நான்கு நாளில் வீரியம் அதிகரிக்கும். ஆனால், இரண்டாவது அலையில், தொற்று உருவான மூன்றாவது நாளில் சளி, காய்ச்சல், உடல்வலி எதுவும் இல்லாமல் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது. அடுத்த மூன்று நாளில் உயிரிழப்பை ஏற்படுத்துகிறது. ஆத்தூர் நகரில் நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகரித்து வருகிறது. தொற்று பரவல் அதிகரித்து வருவதால், தேவையின்றி வெளியே வரக்கூடாது. முக கவசம் அணிவது, சானிடைசரால் கைகளை துடைத்து கொள்வது, சமூக இடைவெளி பின்பற்றுவது உள்ளிட்ட முறைகளை, ஒவ்வொருவருக்கும் பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X