பொது செய்தி

தமிழ்நாடு

வேட்பாளரை மாற்றியும் தி.மு.க., தோல்வி: மூன்று முறை தொடர்ந்து அ.தி.மு.க., வெற்றி

Added : மே 04, 2021
Share
Advertisement
ஆத்தூர்: ஆத்தூர் தொகுதியில், தி.மு.க., பெண் வேட்பாளரை மாற்றப்பட்டபோதும், உள்ளூர் வேட்பாளரை அறிவிக்காததால், தி.மு.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.சேலம் மாவட்டம், ஆத்தூர் (தனி) தொகுதியில், தி.மு.க., சார்பில் வேட்பாளராக ஜீவா ஸ்டாலினை, அக்கட்சி தலைமை அறிவித்தது. அவரது ஜாதி சான்று மீது சர்ச்சை எழுந்ததால், ஜீவா ஸ்டாலினை மாற்றம் செய்து, கெங்கவல்லியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.,

ஆத்தூர்: ஆத்தூர் தொகுதியில், தி.மு.க., பெண் வேட்பாளரை மாற்றப்பட்டபோதும், உள்ளூர் வேட்பாளரை அறிவிக்காததால், தி.மு.க., வேட்பாளர் தோல்வியடைந்தார்.


சேலம் மாவட்டம், ஆத்தூர் (தனி) தொகுதியில், தி.மு.க., சார்பில் வேட்பாளராக ஜீவா ஸ்டாலினை, அக்கட்சி தலைமை அறிவித்தது. அவரது ஜாதி சான்று மீது சர்ச்சை எழுந்ததால், ஜீவா ஸ்டாலினை மாற்றம் செய்து, கெங்கவல்லியை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ., சின்னதுரையை, ஆத்தூர் வேட்பாளராக கட்சி தலைமை அறிவித்தது. அ.தி.மு.க.,வில் ஆத்தூரை சேர்ந்த ஜெயசங்கரன் போட்டியிட்டார். தி.மு.க., வேட்பாளரை, உள்ளூர் வேட்பாளர் இல்லை என, அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் பிரசாரத்தில் பேசினர். ஓட்டு எண்ணிக்கையில், 8,257 ஓட்டு வித்தியாசத்தில், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயசங்கரனிடம் தோல்வியடைந்தார். ஆத்தூர் தொகுதி, அ.ம.மு.க., வேட்பாளர் மாதேஸ்வரன். இவர் கடந்த, 2011ல், அ.தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்டபோது, 29 ஆயிரத்து, 856 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2021ல், அ.ம.மு.க., வேட்பாளராக களம் இறக்கப்பட்ட இவர், 1,699 ஓட்டுகள் மட்டுமே பெற்று படுதோல்வியடைந்துள்ளார். அ.தி.மு.க., தி.மு.க.,வுக்கு அடுத்தப்படியாக, நாம் தமிழர் கட்சி, 10 ஆயிரத்து, 233 ஓட்டுகளும்; மக்கள் நீதிமய்யம் கட்சி, 1,959 ஓட்டுகளும் பெற்றுள்ளனர். அ.ம.மு.க., - தே.மு.தி.க., கூட்டணி அமைத்திருந்தபோதும், அ.ம.மு.க., ஐந்தாவது இடத்தில் சென்றுள்ளது. 2008ல், ஆத்தூர் (தனி) தொகுதியாக மாற்றப்பட்டது. 2011ல், மாதேஸ்வரன் (ஓட்டுகள் -88,036), 2016ல், சின்னதம்பி (ஓட்டுகள் -82,827), 2021ல், ஜெயசங்கரன் (95,308) என, அ.தி.மு.க., தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று, ஓட்டுகளும் அதிகரித்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X