முககவசம் அணியாத 22 பேருக்கு அபராதம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

முககவசம் அணியாத 22 பேருக்கு அபராதம்

Added : மே 04, 2021
Share
ஆத்தூர்: முககவசம் அணியாத, 22 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆத்தூர் நகர் பகுதியில். நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையிலான தூய்மை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத, 22 பேருக்கு மொத்தம், 4,400 ரூபாய் அபராதம் விதித்தனர். ஆத்தூர் நகர் பகுதியில், நான்காவது வார்டு, மாணிக்கம் தெரு, ஏழாவது வார்டு, அவ்வையார் தெருக்களில் சளி மாதிரி பரிசோதனை

ஆத்தூர்: முககவசம் அணியாத, 22 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆத்தூர் நகர் பகுதியில். நேற்று நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி தலைமையிலான தூய்மை பணியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது முககவசம் அணியாத, 22 பேருக்கு மொத்தம், 4,400 ரூபாய் அபராதம் விதித்தனர். ஆத்தூர் நகர் பகுதியில், நான்காவது வார்டு, மாணிக்கம் தெரு, ஏழாவது வார்டு, அவ்வையார் தெருக்களில் சளி மாதிரி பரிசோதனை முகாம் நடந்தது. 33வது வார்டு கண்ணாடி மில் தெரு, அண்ணா நகர், 24வது வார்டு, முதல் மற்றும் இரண்டாவது காந்திரோடு, 23வது வார்டு, நாராயணசாமி தெரு, சத்யசாய் நகர் ஆகிய இடங்களில் காய்ச்சல் முகாம் நடந்தது. மருத்துவ குழுவினர் இளங்கோ, கோகிலவாணி, சண்முகப்ரியா, பாலகுரு ஆகியோர் முகாமிட்டு, சளி பரிசோதனை எடுத்து, காய்ச்சல் பாதித்த, 200க்கும் மேற்பட்டோருக்கு மருந்து, மாத்திரை வழங்கினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X