சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரண்டு மாதமாக தண்ணீர் வினியோகம் இல்லை: குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்

Added : மே 04, 2021
Share
Advertisement
வீரபாண்டி: தண்ணீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து, பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாக்ரடீஸ் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சி சார்பில் இவர்களுக்கு தினசரி ஆழ்துளை குழாய் தண்ணீர், 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த இரண்டு

வீரபாண்டி: தண்ணீர் வினியோகம் செய்யப்படாததை கண்டித்து, பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


ஆட்டையாம்பட்டி அருகே, எஸ்.பாப்பாரப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட சாக்ரடீஸ் நகரில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஊராட்சி சார்பில் இவர்களுக்கு தினசரி ஆழ்துளை குழாய் தண்ணீர், 10 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. கடந்த இரண்டு மாதத்துக்கு முன், தலைவாசல் கால்நடை பூங்கா, பல்கலைகழகத்துக்கு குடிநீர் கொண்டு செல்ல, இடைப்பாடியில் இருந்து ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் வழியாக ராட்சத குழாய்கள் பதிக்கும் பணி நடந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக மேட்டுக்கடை பகுதியில் சாக்ரடீஸ் நகருக்கு தண்ணீர் வினியோகம் செய்யும் குழாய் உடைந்தது. இரண்டு மாதமாகியும் சரி செய்யப்படவில்லை. ஊராட்சி தலைவர், செயலாளர், டேங்க் ஆப்பரேட்டர்களுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் நேற்று பகல், 12:20 மணியளவில் ஆட்டையாம்பட்டி - ராசிபுரம் சாலை மேட்டுக்கடை சாலையில், 50க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக் குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் ஆட்டையாம்பட்டி போலீசார், எஸ்.பாப்பாரப்பட்டி வி.ஏ.ஓ., மணிகண்டன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பகுதி மக்களுக்கு தண்ணீர் வினியோகம் செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என, உறுதியளித்ததை தொடர்ந்து, மக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X