பொது செய்தி

தமிழ்நாடு

தர்மபுரியில் 10 ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று

Added : மே 04, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று, 10 ஆயிரத்தை கடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க, சுகாதார மற்றும் மருத்துவத்துறையினர், பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், பொதுமக்கள் தனி மனித இடைவெளி, முக கசவம் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்காமல் உள்ளனர். இதனால், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் நேற்று கொரோனா தொற்று, 10 ஆயிரத்தை கடந்தது. தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்றை தடுக்க, சுகாதார மற்றும் மருத்துவத்துறையினர், பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும், பொதுமக்கள் தனி மனித இடைவெளி, முக கசவம் உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்காமல் உள்ளனர். இதனால், மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நேற்றைய நிலவரப்படி கொரோனா தொற்றால், 171 பேர் என, இதுவரை மொத்தம், 10 ஆயிரத்து, ஒன்பது பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 8,669 பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பியுள்ளனர். 1,273 பேர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பலனின்றி, 67 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X