தமிழ்நாடு

தர்மபுரியில் வாஷ்அவுட் ஆன தி.மு.க.,: நடவடிக்கை பாயுமா; நிர்வாகிகள் கலக்கம்

Added : மே 04, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியால், தி.மு.க., தலைமை தங்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என, அக்கட்சியின் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., மெகா கூட்டணி அமை த்து போட்டியிட்டது. அ.தி.மு.க., பலமாக உள்ள கொங்கு மண்டலத்திலும், தி.மு.க., மற்றும் காங்., ஒரு சில இடங்களை

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தின் ஐந்து தொகுதிகளிலும், தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தோல்வியால், தி.மு.க., தலைமை தங்கள் மீது நடவடிக்கை எடுக்குமா என, அக்கட்சியின் நிர்வாகிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.


நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், தி.மு.க., மெகா கூட்டணி அமை த்து போட்டியிட்டது. அ.தி.மு.க., பலமாக உள்ள கொங்கு மண்டலத்திலும், தி.மு.க., மற்றும் காங்., ஒரு சில இடங்களை பிடித்தது. ஆனால், கடந்த சட்டசபை தேர்தலில், தர்மபுரி மாவட்டத்தில் வெற்றி பெற்ற ?தொகுதிகளிலும், தி.மு.க., வேட்பாளர்கள் தற்போது தோல்வியை தழுவி உள்ளனர். மேலும், பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் உள்ளிட்ட தொகுதிகளில் மீண்டும் தோல்வி அடைந்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தின்போது ஸ்டாலின், தர்மபுரி மாவட்டத்துக்கான ஏராளமான திட்டங்களை அறிவித்தும், அதை, பொதுமக்களிடம் முழுமையாக கொண்டு சேர்க்கவில்லை. இதற்கு காரணம், தி.மு.க., நிர்வாகிகள் என, தி.மு.க., தலைமைக்கு தெரியவந்துள்ளது. இதனால், தர்மபுரி மாவட்டத்தின், ஐந்து தொகுதிகளிலும், தி.மு.க., கூட்டணி, வாஷ் அவுட் ஆக காரணமான நிர்வாகிகள் குறித்து, கட்சியினர் கொடுத்த புகார் மற்றும் உளவுத்துறையினர் கொடுத்த தகவலின்படி, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க ஆயத்தமாகி உள்ளார். இதனால், தர்மபுரி மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் தங்களது பதவி பறிபோகுமோ என கலக்கம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X