பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனாவை மறந்து ஒரே நேரத்தில் வங்கியில் குவிந்த வாடிக்கையாளர்கள்

Added : மே 04, 2021
Share
Advertisement
பாலக்கோடு: பாலக்கோட்டில், கொரோனா பரவலை மறந்து, வங்கிகளில் குவிந்த வாடிக்கையாளர்களால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலத்திலுள்ள கிராமங்களில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதனால், அங்கு யாரும் செல்லக்கூடாது என அக்கிராமங்களுக்கு அதிகாரிகள், சீல் வைத்துள்ளனர். மேலும், கொரோனா தொற்று பரவலை தடுக்க

பாலக்கோடு: பாலக்கோட்டில், கொரோனா பரவலை மறந்து, வங்கிகளில் குவிந்த வாடிக்கையாளர்களால் தொற்று மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.


தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு மற்றும் காரிமங்கலத்திலுள்ள கிராமங்களில் கொரோனா தொற்று அதிகளவில் பரவி வருகிறது. இதனால், அங்கு யாரும் செல்லக்கூடாது என அக்கிராமங்களுக்கு அதிகாரிகள், சீல் வைத்துள்ளனர். மேலும், கொரோனா தொற்று பரவலை தடுக்க பொதுஇடங்களில், முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என, பொதுமக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் நேற்று, பாலக்கோட்டிலுள்ள ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் வங்கிகளுக்கு வந்த வாடிக்கையாளர்கள் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், கொரோனா தொற்று பரவலை மறந்தும், முண்டியடித்து ஒரே நேரத்தில், நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டனர். இதை வங்கி அதிகாரிகளும், போலீசாரும் கண்டுகொள்ளாததால், கொரோனா தொற்று மேலும் பாலக்கோடு பகுதியில் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டது. எனவே, வங்கிகளுக்கு வரும் வாடிக்கையாளர்களை வரிசைப்படுத்தி சமூக இடைவெளியை கடைப்பிடித்து வங்கிக்குள் அனுமதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X