மந்தகதியில் சாக்கடை கால்வாய் பணி

Added : மே 04, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரியில், மந்தகதியில் நடந்து வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.தர்மபுரியில், கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் துவங்கப்பட்ட இப்பணி, தற்போது மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால், இவ்வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள்

தர்மபுரி: தர்மபுரியில், மந்தகதியில் நடந்து வரும் சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியால், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.


தர்மபுரியில், கிருஷ்ணகிரி செல்லும் சாலையில், சாக்கடை கால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஒரு மாதத்துக்கு முன் துவங்கப்பட்ட இப்பணி, தற்போது மந்தகதியில் நடந்து வருகிறது. இதனால், இவ்வழியாக சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும், இக்கால்வாய் அதிக பள்ளமாக உள்ளதால், இப்பகுதி யில் வசிக்கும் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள், இரவு நேரத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். மேலும், தற்போது கோடை மழையால் இப்பகுதி சேறும், சகதியுமாக மாறி, வாகன ஓட்டிகள் சறுக்கி விழும் நிலை உள்ளது. இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதி மக்கள் மற்றும் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளின் நலன்கருதி, மந்தகதியில் நடக்கும் இந்த சாக்கடை கால்வாய் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X