பயன்பாடின்றி காட்சி பொருளான தண்ணீர் தொட்டியை சீரமைக்கலாமே

Added : மே 04, 2021
Share
Advertisement
தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பெரியாம்பட்டி காலனியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இதில், சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. பின், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம், பெரியாம்பட்டி பஞ்.,க்கு உட்பட்ட பெரியாம்பட்டி காலனியில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை சார்பில், சின்டெக்ஸ் தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது. ஐந்து ஆண்டுகளுக்கு முன், ஒரு லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட இதில், சில மாதங்கள் மட்டுமே தண்ணீர் வந்தது. பின், இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்ததையடுத்து, இதில் தண்ணீர் வரத்து நின்று போனது. மேலும், இத்தொட்டியின் மின்மோட்டாரை, சிலர் திருடிச்சென்றனர். இதனால், இந்தொட்டி பயன்பாடின்றி காட்சி பொருளானது. மேலும், தொட்டியை சுற்றி முட்புதர்கள் மண்டியுள்ளதால், இதன் அருகே கூட செல்ல முடியாத நிலையுள்ளது. இந்த தண்ணீர் தொட்டியை சீரமைக்கக்கோரி, அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. எனவே, இப்பகுதி மக்களின் நலன் கருதி, காட்சி பொருளாக உள்ள, இந்த தண்ணீர் தொட்டியை சீரமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X