பொது செய்தி

தமிழ்நாடு

பதிவான ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பி வைப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையமான, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் ஓட்டு

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான, ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், கிருஷ்ணகிரி ஓட்டு எண்ணிக்கை மையத்திலிருந்து, அந்தந்த தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.


கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு எண்ணிக்கை மையமான, கிருஷ்ணகிரி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டன. நேற்று முன்தினம் ஓட்டு எண்ணிக்கை முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அரசு விதிப்படி, ஓட்டுப்பதிவுக்குப்பின், ஓட்டுக்கள் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும், அந்தந்த தொகுதிக்கு உட்பட்ட அலுவலகங்களில், 90 நாட்கள் வைக்கப்பட்டு, தேர்தல் ஆணையத்தின் உத்தரவுக்கு பிறகு, அவை அங்கிருந்து அனுப்பி வைக்கப்படும். அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொகுதிவாரியாக பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், அந்தந்த பகுதி அரசு அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதன்படி, கிருஷ்ணகிரி ஆர்.டி.ஓ., அலுவலகம், கிருஷ்ணகிரி இ.வி.எம்., ஸ்ட்ராங் ரூம், சூளகிரி பி.டி.ஓ., அலுவலகம், ஊத்தங்கரை பி.டி.ஓ., அலுவலகம், பர்கூர் தாலுகா அலுவலகம் மற்றும் தேன்கனிகோட்டை தாலுகா அலுவலகத்திலும் வைக்க, லாரிகளில் அனுப்பப்பட்டன. தேர்தல் நடத்தும் அதிகாரிகள், தாசில்தார், ஆர்.டி.ஓ, மற்றும் அலுவலர்கள் மேற்பார்வையில் இப்பணி நடந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X