தமிழ்நாடு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ம.நீ.ம.,- அ.ம.மு.க.,வை முந்திய நோட்டா

Added : மே 04, 2021
Share
Advertisement
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட சில தொகுதிகளில், நோட்டா அளவுக்கு கூட அக்கட்சியினர் ஓட்டுகளை பெற முடியாமல் போனது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங் கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், மக்கள் நீதி மய்யம், அ.ம.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் போட்டியிட சில தொகுதிகளில், நோட்டா அளவுக்கு கூட அக்கட்சியினர் ஓட்டுகளை பெற முடியாமல் போனது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில், ஊத்தங் கரை, பர்கூர், கிருஷ்ணகிரி, வேப்பனஹள்ளி, ஓசூர், தளி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளில் பதிவான ஓட்டுகள், நேற்று முன்தினம் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என, 86 பேர் போட்டியிட்டனர். யாருக்கும் ஓட்டளிக்க பிடிக்காத வாக்காளர்கள், நோட்டாவில் பதிவு செய்தனர். அதன்படி, ஆறு சட்டசபை தொகுதியில், முதல் ஆறு இடங்களுக்குள், நோட்டா ஓட்டுகள் இடம்பெற்றன. ஊத்தங்கரை தொகுதியில், 12 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில், 1,359 ஓட்டுகள் பெற்ற நோட்டா, ஐந்தாவது இடத்தை பெற்றது. அதேபோல், பர்கூரில், 14 பேர் போட்டியிட்ட நிலையில், 1,518 ஓட்டுகளை பெற்ற நோட்டா, நான்காவது இடத்தையும், கிருஷ்ணகிரி தொகுதியில், 15 பேர் போட்டியிட்ட நிலையில், 1,837 ஓட்டுகளை பெற்ற நோட்டா, ஐந்தாவது இடத்தையும் பிடித்தது.

கிருஷ்ணகிரி தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளர் அசோக்குமார், தி.மு.க., வேட்பாளர் செங்குட்டுவனை, 794 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். ஆனால் நோட்டாவுக்கு, 1,827 ஓட்டுகள் கிடைத்திருந்தன. வேப்பனஹள்ளியில், 15 பேர் போட்டியிட்டனர். அதில், 1,662 ஓட்டுகள் பெற்ற நோட்டா, ஆறாவது இடத்தை பெற்றது. ஓசூர் தொகுதியில், 18 பேர் போட்டியிட்ட நிலையில், 1,976 ஓட்டுகளை பெற்ற நோட்டா, ஐந்தாவது இடத்தையும், தளி தொகுதியில், 12 பேர் போட்டியிட்ட நிலையில், 1,966 ஓட்டுகள் பெற்ற நோட்டா, நான்காவது இடத்தையும் பெற்றது. பர்கூர், ஓசூர் மற்றும் கிருஷ்ணகிரி தொகுதியில், அ.ம.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மற்றும் ஊத்தங்கரை, வேப்பன ஹள்ளியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் மற்றும் அக்கட்சி கூட்டணி பலத்துடன், பர்கூர், தளியில் போட்டியிட்ட இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர்கள் பெற்ற ஓட்டுகளை விட, நோட்டா அதிக ஓட்டுகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X