பொது செய்தி

தமிழ்நாடு

குறைந்த ஓட்டு வித்தியாசம் நீடித்ததால் கிருஷ்ணகிரி தொகுதியில் திக்... திக்...

Added : மே 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: குறைந்த ஓட்டு வித்தியாசம் நீடித்ததால், கிருஷ்ணகிரி தொகுதி ஓட்டு எண்ணிக்கையின்போது, திக்... திக்... மனப்பான்மையில் கட்சியினர் இருந்தனர்.கிருஷ்ணகிரி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் அசோக்குமாரும், தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., செங்குட்டுவனும் போட்டியிட்டனர். மூன்றாவது சுற்றில் அசோக்குமார், 1,377 ஓட்டு கூடுதலாக பெற்று, தொடர்ந்து, 15 சுற்றுகள் வரை

கிருஷ்ணகிரி: குறைந்த ஓட்டு வித்தியாசம் நீடித்ததால், கிருஷ்ணகிரி தொகுதி ஓட்டு எண்ணிக்கையின்போது, திக்... திக்... மனப்பான்மையில் கட்சியினர் இருந்தனர்.


கிருஷ்ணகிரி தொகுதியில், அ.தி.மு.க., சார்பில் அசோக்குமாரும், தி.மு.க., சார்பில் சிட்டிங் எம்.எல்.ஏ., செங்குட்டுவனும் போட்டியிட்டனர். மூன்றாவது சுற்றில் அசோக்குமார், 1,377 ஓட்டு கூடுதலாக பெற்று, தொடர்ந்து, 15 சுற்றுகள் வரை முன்னிலையில் இருந்தார். பின், 16வது சுற்றில் செங்குட்டுவன், 613 ஓட்டுகள் முன்னிலை பெற்றார். தொடர்ந்து அடுத்தடுத்த சுற்றுகளில் செங்குட்டுவனும், அசோக்குமாரும் மாறி மாறி முன்னிலை பெற்றனர். இதுபோன்று, 27 சுற்றுகள் வரை நடந்ததால், வேட்பாளர்கள் மட்டுமின்றி, கட்சியினர் மத்தியிலும் திக்... திக்... மனநிலை நீடித்தது. மாலை, 6:00 மணிக்கு, 27 சுற்றுகள் முடிந்த நிலையில், பாலகுறி மற்றும் கங்கலேரியில் பதிவான இரண்டு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பழுதானதால், விவிபேட் இயந்திரங்களில் உள்ள சின்னங்கள் வேட்பாளர்கள் முன்னிலையில் எண்ணப்பட்டன. முடிவில், தபால் ஓட்டுகளையும் சேர்த்து, 794 ஓட்டுகள் அதிகம் பெற்று, அசோக்குமார் முன்னிலை பெற்றார். அதனால் செங்குட்டுவன், தேர்தல் நடத்தும் அலுவலர் கற்பகவள்ளி மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜெயசந்திரபானு ரெட்டியிடம், 605 தபால் ஓட்டுகள் நிராகரிக்கப்பட்டுள்ளன, குறைந்த ஓட்டு வித்தியாசமே உள்ளதால், ஓட்டுப்பதிவை முதலில் இருந்து நடத்த கோரிக்கை வைத்தார். மீண்டும் ஓட்டு எண்ணிக்கை நடத்த, தனக்கு அதிகாரம் இல்லை, தேர்தல் ஆணையத்தில் முறையிடுங்கள் என, கலெக்டர் கூறியதால், இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரிடம், செங்குட்டுவன் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இரவு, 10:05 மணிக்கு அசோக்குமார் வெற்றி பெற்றதாக, தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ் வழங்கினார். இதனால், 17வது சுற்றிலிருந்து இரவு, 10:00 மணி வரை, தி.மு.க., மற்றும் அ.தி.மு.க.,வினரிடையே திக்... திக்... என்ற நிலையே நீடித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X