பொது செய்தி

தமிழ்நாடு

முகக்கவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம்

Added : மே 04, 2021
Share
Advertisement
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், முகக்கவசம் அணியாமல், சாலையில் வாகனங்களில் சென்றவர்களை, தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று, இரண்டாவது அலை வேகமெடுத்து, தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. தமிழக அரசு, சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்தாலும், சிலர் அவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்காமல் இருக்கின்றனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், முகக்கவசம் அணியாமல், சாலையில் வாகனங்களில் சென்றவர்களை, தடுத்து நிறுத்தி போலீசார் அபராதம் விதித்தனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனா தொற்று, இரண்டாவது அலை வேகமெடுத்து, தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள், அதிகரித்து வருகிறது. தமிழக அரசு, சுகாதாரத்துறை கட்டுப்பாடுகளை விதித்தாலும், சிலர் அவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்காமல் இருக்கின்றனர். நேற்று மாலை, கிருஷ்ணகிரியில், அதிகம் புழக்கமுள்ள, பெங்களூரு சாலை, தாலுகா அலுவலகம் முன்பு மற்றும் பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள, பி.எஸ்.என்.எல்., அலுவலகம் முன்பு என, சாலையில் முகக்கவசம் அணியாமல் செல்வோரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களுக்கு தலா, 100 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும், ரோட்டோர கடைகளில் கூட்டமாக நிற்பவர்களை, சமூக இடைவெளியுடன் நிற்குமாறும் அறிவுறுத்தினர். நேற்று ஒரே நாளில், 100க்கும் மேற்பட்டோர் வாகனங்களில் முகக்கவசம் அணியாமல் சென்றதாகவும், முகக்கவசம் கையில் வைத்திருந்தும் முகத்தில் அணியாமலும் சென்றுள்ளனர். அவர்களிடம், கட்டுப்பாடுகளை மட்டும்தான் அரசு விதிக்க முடியும், விதிகளை மக்கள் தான் பின்பற்ற வேண்டும் என அறிவுரை கூறி, போலீசார் அனுப்பினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X