பொது செய்தி

தமிழ்நாடு

அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தி.மு.க.,வினர் 108 தேங்காய் உடைப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: தி.மு.க., வெற்றி பெற்றதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு, தி.மு.க.,வினர், 108 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.திருவண்ணாமலை தொகுதியில், பா.ஜ., சார்பில் தணிகைவேல், தி.மு.க., சார்பில், எ.வ.வேலு போட்டியிட்டனர். இதில், எ.வ.வேலு, வேட்புமனு தாக்கல் செய்தவுடன், பிரசாரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தொடங்கினார். அப்போது தொண்டர்கள், தேர்தலில்

திருவண்ணாமலை: தி.மு.க., வெற்றி பெற்றதையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு, தி.மு.க.,வினர், 108 தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.


திருவண்ணாமலை தொகுதியில், பா.ஜ., சார்பில் தணிகைவேல், தி.மு.க., சார்பில், எ.வ.வேலு போட்டியிட்டனர். இதில், எ.வ.வேலு, வேட்புமனு தாக்கல் செய்தவுடன், பிரசாரத்தை அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு தொடங்கினார். அப்போது தொண்டர்கள், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தனர். இந்நிலையில், எ.வ.வேலு, 94 ஆயிரத்து, 673 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். மேலும், தி.மு.க., பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைக்க உள்ளது. இதையடுத்து, தி.மு.க.,வினர், நேர்த்திக்கடனாக, அருணாசலேஸ்வரர் கோவில் முன்பு, 108 தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X