பொது செய்தி

தமிழ்நாடு

64 ஆண்டு சென்டிமென்டை மாற்றிய ஆரணி

Added : மே 04, 2021
Share
Advertisement
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டசபை தொகுதியில், இதுவரை நடந்த, 15 தேர்தல்களில், காமன்வெல்த் கட்சி - 1, காங்., - 2, அ.தி.மு.க., - 6, தி.மு.க., - 5, தே.மு.தி.க., - 1 முறை என, வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் வெற்றி பெறும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிதான் ஆட்சி அமைக்கும் என சென்டிமென்ட் இருந்தது. கடந்த, 1957, 1962ல், காங்., வெற்றி பெற்று, காமராஜர் முதல்வரானார். 1967, 1971, 1989, 1996, 2000ல் நடந்த தேர்தல்களில்,

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி சட்டசபை தொகுதியில், இதுவரை நடந்த, 15 தேர்தல்களில், காமன்வெல்த் கட்சி - 1, காங்., - 2, அ.தி.மு.க., - 6, தி.மு.க., - 5, தே.மு.தி.க., - 1 முறை என, வெற்றி பெற்றுள்ளன. இத்தொகுதியில் வெற்றி பெறும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிதான் ஆட்சி அமைக்கும் என சென்டிமென்ட் இருந்தது. கடந்த, 1957, 1962ல், காங்., வெற்றி பெற்று, காமராஜர் முதல்வரானார். 1967, 1971, 1989, 1996, 2000ல் நடந்த தேர்தல்களில், தி.மு.க., வெற்றி பெற்று, அண்ணாதுரை மற்றும் கருணாநிதி முதல்வராகினர். 1977, 1980, 1984ல், அ.தி.மு.க., வெற்றி பெற்று, எம்.ஜி.ஆர்., முதல்வர் ஆனார்.? மேலும், 1991, 2001, 2016ல், அ.தி.மு.க. வெற்றி பெற்றபோதும், 2011ல் கூட்டணி கட்சியான தே.மு.தி.க., வெற்றி பெற்றபோதும், ஜெயலலிதா முதல்வரானார். இந்த சென்டிமென்ட் தொடருமா என, அப்பகுதி மக்கள் எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், கடந்த, அ.தி.மு.க., ஆட்சியில் அறநிலையத்துறை அமைச்சராக இருந்த சேவூர் ராமச்சந்திரன், மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இத்தேர்தலில், தி.மு.க., ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த, 64 ஆண்டுகளாக இருந்த சென்டிமென்டை ஆரணி தொகுதி உடைத்தெறிந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X