பொது செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலினுக்கு தருமை ஆதீனம் வாழ்த்து

Added : மே 04, 2021
Share
Advertisement
மயிலாடுதுறை: தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தருமை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு, தருமை ஆதீனம், 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்கி, வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் தீர்ப்பை ஏற்று பொறுப்பேற்கும் புதிய

மயிலாடுதுறை: தமிழக முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு தருமை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் புதியதாக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு, தருமை ஆதீனம், 27வது குருமகா சன்னிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஆசி வழங்கி, வெளியிட்டுள்ள அறிக்கை: மக்கள் தீர்ப்பை ஏற்று பொறுப்பேற்கும் புதிய அரசு சமயம், மதம், இனம் கடந்த பொதுநிலையில் நின்று ஆட்சி செய்யவும், கொரோனா நெருக்கடி காலத்தில் பொறுப்பேற்கும் நிலையில் அதன் தன்மைக்கேற்பவும் எந்நிலையிலும் ஒருசார்பு இல்லாது ஆட்சி செலுத்தவும் வாழ்த்துகிறேன். மேலும், இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்லது அரசு என்ற வள்ளுவர் வாக்கிற்கு ஏற்பவும், 'தன்னால், தன் பரிசனத்தால், ஊனமிகு பகைத்திறத்தால், கள்வரால், உயிர்கள் தம்மால் ஆன பயம் ஐந்தும் தீர்த்து ஆள்வது அரசு ' என்ற சேக்கிழார் கூற்றின் படியும் ஆட்சி செலுத்த வாழ்த்து தெரிவிக்கிறேன். இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X