பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி அமைச்சர் பெற்றது 9,891 ஓட்டு மட்டுமே

Added : மே 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சுயேச்சையாக களம் இறங்கி, 9,891 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.பெருந்துறை தொகுதியில், 2011, 2016ல் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வாகவும், ஈரோடு புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளராகவும், 2013 முதல், 2016 தேர்தல் வரை, அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016ல் தேர்தலில் இவர் வென்றபோதும், இவரிடம் இருந்து அமைச்சர் மற்றும் புறநகர்

ஈரோடு: ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், சுயேச்சையாக களம் இறங்கி, 9,891 ஓட்டுகள் மட்டுமே பெற்றார்.


பெருந்துறை தொகுதியில், 2011, 2016ல் அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ.,வாகவும், ஈரோடு புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., செயலாளராகவும், 2013 முதல், 2016 தேர்தல் வரை, அமைச்சராக இருந்தவர் தோப்பு வெங்கடாசலம். 2016ல் தேர்தலில் இவர் வென்றபோதும், இவரிடம் இருந்து அமைச்சர் மற்றும் புறநகர் மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்டது. 2016 இறுதியில் ஜெ., மறைவுக்குப்பின், அ.தி.மு.க.,வில் முக்கியத்துவம் வழங்கப்படவில்லை என்பது இவரது ஆதங்கம். அதேநேரம் இவரது தரப்பில் இருந்து, அ.ம.மு.க., அல்லது தி.மு.க.,வுக்கு செல்லுதல் என்பது போன்ற தகவல்கள் கசிந்தன. அ.தி.மு.க.,- எம்.எல்.ஏ., மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக பேட்டி கொடுத்தல், முதல்வரை புறக்கணித்தல் என பல்வேறு நிகழ்வுகள் நடந்தன. இதனால், சட்டசபை தேர்தலில் இவருக்கு சீட்டு வழங்காமல், இவரை எதிர்த்து, அ.தி.மு.க.,வில் ஜெயகுமார் என்பவருக்கு சீட் வழங்கப்பட்டது. தி.மு.க.,வில் கே.கே.சி.பாலு என்பவர் போட்டியிட்டார். தனக்கு வாய்ப்பு வழங்கப்படும் என காத்திருந்த தோப்பு வெங்கடாசலம், சுயேச்சையாக போட்டியிட்டு, கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருந்தும் கடுமையான பிரசாரம் செய்தார். இறுதியாக, அ.தி.மு.க., ஜெயகுமார் - 85,125, தி.மு.க., கே.கே.சி.பாலு - 70,618, தோப்பு வெங்கடாசலம் - 9,891 ஓட்டுகள் பெற்றனர். தோப்பு வெங்கடாசலம் சுயேச்சையாக நின்றதால், அ.தி.மு.க., ஓட்டு சரிந்து, தி.மு.க., வேட்பாளர் வெல்வார் என்றும், அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயகுமார் தோற்பார் என்ற மாயை நிலவியது. ஆனால், தோப்பு வெங்கடாசலம் பெற்ற ஓட்டைவிட, ஜெயகுமாருக்கும், கே.கே.சி.பாலுக்குமான ஓட்டு வித்தியாசமே, 14,507 என்றானது. இத்தொகுதியில் பத்தாண்டு எம்.எல்.ஏ.,வாகவும், மூன்றாண்டு அமைச்சராகவும் இருந்த தோப்பு வெங்கடாசலத்தைவிட, அதே தொகுதியில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி லோகநாதன், 10,294 ஓட்டுகள் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X