பொது செய்தி

தமிழ்நாடு

8 தொகுதிகளில் 16 பேர் தவிர 112 பேர் டிபாசிட் இழப்பு

Added : மே 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதியில், 128 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 16 பேர் தவிர, 112 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு - 14, ஈரோடு மேற்கு - 15, மொடக்குறிச்சி - 15, பெருந்துறை - 25, பவானி - 14, அந்தியூர் - 20, கோபி - 19, பவானிசாகர் - 6 என, எட்டு தொகுதியில், 128 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஈரோடு கிழக்கு, காங்., திருமகன் ஈவெரா, ஈரோடு மேற்கு,

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள, எட்டு சட்டசபை தொகுதியில், 128 வேட்பாளர்கள் போட்டியிட்டதில், 16 பேர் தவிர, 112 வேட்பாளர்கள் டிபாசிட் இழந்தனர்.


ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு - 14, ஈரோடு மேற்கு - 15, மொடக்குறிச்சி - 15, பெருந்துறை - 25, பவானி - 14, அந்தியூர் - 20, கோபி - 19, பவானிசாகர் - 6 என, எட்டு தொகுதியில், 128 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் ஈரோடு கிழக்கு, காங்., திருமகன் ஈவெரா, ஈரோடு மேற்கு, தி.மு.க., முத்துசாமி, மொடக்குறிச்சி, பா.ஜ., சரஸ்வதி, பெருந்துறை, அ.தி.மு.க., ஜெயகுமார், பவானி, அ.தி.மு.க., கருப்பணன், அந்தியூர், தி.மு.க., வெங்கடாசலம், கோபி, அ.தி.மு.க., செங்கோட்டையன், பவானிசாகர், அ.தி.மு.க., பண்ணாரி ஆகியோர் வென்றனர். இவர்களை எதிர்த்து போட்டியிட்ட தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களான ஈரோடு கிழக்கு, அ.தி.மு.க., யுவராஜா, ஈரோடு மேற்கு, அ.தி.மு.க., ராமலிங்கம், மொடக்குறிச்சி தி.மு.க., சுப்புலட்சுமி ஜெகதீசன், பெருந்துறை, தி.மு.க., பாலு, பவானி, தி.மு.க., துரைராஜ், அந்தியூர், அ.தி.மு.க., சண்முகவேல், கோபி, தி.மு.க., மணிமாறன், பவானிசாகர் இந்திய கம்யூனிஸ்ட் சுந்தரம் ஆகியோர் மட்டுமே, குறைந்த வித்தியாசத்தில் தோல்வி அடைந்தனர். இந்த, 16 பேர் மட்டுமே டிபாசிட் பெற தகுதி பெற்றனர். மீதமுள்ள கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள், 112 பேர் டிபாசிட் இழந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X