பொது செய்தி

தமிழ்நாடு

40 ஆண்டுகளுக்குப்பின் ஈரோட்டில் காங்., வெற்றி

Added : மே 04, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு தொகுதியில், 40 ஆண்டுகளுக்கு முன் காங்., சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து தோல்வியை அந்த வேட்பாளர் சந்தித்த நிலையில், தற்போது காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வென்றதால், காங்கிரஸார் உற்சாகம் அடைந்துள்ளனர்.ஈரோடு சட்டசபை தொகுதியில், 1957ல் காங்., சார்பில் மாணிக்கசுந்தரம், 1962ல் தட்சணாமூர்த்தி ஆகியோர் எம்.எல்.ஏ.,வாக இருந்தனர். அதன்பின், 1967ல் தி.மு.க., - சின்னசாமி,

ஈரோடு: ஈரோடு தொகுதியில், 40 ஆண்டுகளுக்கு முன் காங்., சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைத்து தோல்வியை அந்த வேட்பாளர் சந்தித்த நிலையில், தற்போது காங்கிரஸ் வேட்பாளர் திருமகன் ஈவெரா வென்றதால், காங்கிரஸார் உற்சாகம் அடைந்துள்ளனர்.


ஈரோடு சட்டசபை தொகுதியில், 1957ல் காங்., சார்பில் மாணிக்கசுந்தரம், 1962ல் தட்சணாமூர்த்தி ஆகியோர் எம்.எல்.ஏ.,வாக இருந்தனர். அதன்பின், 1967ல் தி.மு.க., - சின்னசாமி, 1971ல் தி.மு.க., எம்.சுப்பிரமணியம், 1977, 1980, 1984ல் அ.தி.மு.க., முத்துசாமி, 1989ல் தி.மு.க., சுப்புலட்சுமி ஜெகதீசன், 1991ல் அ.தி.மு.க., மாணிக்கம், 1996ல் தி.மு.க., என்.கே.கே.பெரியசாமி, 2001ல் அ.தி.மு.க., தென்னரசு, 2006ல் தி.மு.க., ராஜா ஆகியோர் வென்றனர். அதன்பின், தொகுதி மறுசீரமைப்பில் ஈரோடு தொகுதி இரண்டாக பிரித்து ஈரோடு கிழக்கில், 2011ல் தே.மு.தி.க., சந்திரகுமார், 2016ல் அ.தி.மு.க., தென்னரசு, ஈரோடு மேற்கில், 2011, 2016ல் அ.தி.மு.க., ராமலிங்கம் ஆகியோர் எம்.எல்.ஏ.,வாக இருந்தனர்.இதில், 1980ல், அ.தி.மு.க., வேட்பாளர் முத்துசாமியை எதிர்த்து, காங்., சார்பில் சாய்நாதன் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதன் பின் காங்., கட்சி, தி.மு.க., - அ.தி.மு.க., கூட்டணியுடன் இணைந்திருந்தாலும், போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை. 40 ஆண்டுக்குப்பின் தற்போது தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெராவுக்கு, தி.மு.க., கூட்டணியில் வாய்ப்பு கிடைத்தது. இவரை எதிர்த்து, அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா.,வை சேர்ந்த யுவராஜா நின்றார். ஈவெராவின் கொள்ளுப்பேரன், காங்., பாரம்பரியத்தில் வந்தவர் என பல்வேறு அடையாளங்களுடன் திருமகன் ஈவெரா பிரசாரம் மேற்கொண்டார். அ.தி.மு.க., கூட்டணி பலத்துடன் யுவராஜா போட்டியிட்டார். இறுதியாக, திருமகன் ஈவெரா, 67,300ம், யுவராஜா, 58,396 ஓட்டும் பெற்று, 8,904 ஓட்டு வித்தியாசத்தில் திருமகன் ஈவெரா வென்றார். இதன் மூலம், 40 ஆண்டுகளுக்குப்பின் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த வாய்ப்பை, வெற்றி பெற செய்துள்ளதால் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் அடைந்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X